குடியரசுத்தலைவர் பழங்குடியின கைம்பெண் என்பதால் புதிய நாடாளுமன்றதிற்கு அழைக்கப்படவில்லையா?

Sanatan Vs Udhayanidhi: சனாதனம் பற்றி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமான கருத்துக்களின் தொடர்ச்சியாக புதிய நாடாளுமன்றத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 21, 2023, 03:02 PM IST
  • சனாதனம் பற்றி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • இந்திய குடியரசுத் தலைவர் அவமானப்படுத்தப்பட்டாரா?
  • குடியரசுத்தலைவர் புதிய நாடாளுமன்றதிற்கு அழைக்கப்படாதது ஏன்?
குடியரசுத்தலைவர் பழங்குடியின கைம்பெண் என்பதால் புதிய நாடாளுமன்றதிற்கு அழைக்கப்படவில்லையா? title=

சென்னை: புதிய நாடாளுமன்ர கட்டிடத்திற்கு ஹிந்தி நடிக நடிகைகள் அழைக்கப்பட்டதாகவும் ஆனால் இந்தியக் குடியரசுத் தலைவர், நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு அழைக்கப்படாதது ஏன் என்று உதயநிதி ஸ்டாலின் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார். இந்தியக் குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கு காரணம் சனாதனம் தான் என்று கூறிய அவர், தொடர்ந்து சொன்ன கருத்துக்கள் வைரல் ஆகின்றன.

சனாதன தாக்குதல்கள்

திரௌபதி முர்மு பழங்குடியின கைம்பெண் என்பதால் புதிய நாடாளுமன்றத்ற்க்கு அழைக்கப்படவில்லையா என்ற திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு, அவரது 'சனாதன்' தாக்குதல்களின் புதிய வீரியமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்,5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில்  நடைபெற்றது. அப்போது 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர். அப்போதும் குடியரசுத் தலைவர் அங்கு இல்லை.

மேலும் படிக்க | 9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது

அதேபோல, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பழைய கட்டிடத்திற்கு விடைகொடுத்துவிட்டு, ஒன்றாக புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றனர். இது தொடர்பான விழா துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கும் ஏன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்கவில்லை என்ற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், அதற்கு மத்திய அரசின் எண்ணப்போக்கு பற்றி உதயநிதி ஸ்டாலினின் வெளிப்படையான பேச்சு மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது.  

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் மற்றும் கணவரை இழந்தவர் என்பதால் தான் அழைக்கப்படவில்லை என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதால், சனாதன் சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

சனாதன தர்மம்

"இந்தப்போக்கைத் தான் நாங்கள் சனாதன தர்மம் என்று அழைக்கிறோம்," என்று உதயநிதி கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது, சனாதன தர்மம் மற்றும் டெங்கு என ஒப்பிட்ட அவரது பேச்சு, பெரிய அரசியல் சர்ச்சையைத் தூண்டியது. சர்ச்சைகள் வலுத்து பூதாகரமாக வடிவெடுக்கும் நிலையில், சனாதன் சர்ச்சையில் இருந்து விலகி இருக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவினருக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

மேலும் படிக்க | "பாஜக ஆட்சியை வீழ்த்துவதே முதல் நோக்கம்" முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

முன்னதாக, உதயநிதி, திரௌபதி முர்முவின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, அவர் பழங்குடியினராக இருப்பதால், புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்றார். டெங்கு, மலேரியா போன்ற அவரது சனாதன் கருத்து சாதி அடிப்படையிலான சமூகத்திற்கு எதிரானது, இந்து மதத்திற்கு எதிரானது அல்ல என்று அவர் வலியுறுத்தினார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திமுக ஏன் ஆதரவளிக்கவில்லை என்று கேட்டு திமுகவை வளைத்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய ராகுல் காந்தியும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திரௌபதி முர்மு ஏன் ப்அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். "இது ஒரு அழகான கட்டிடம், ஆனால் வெளிப்படையாக, இந்த நாடாளுமன்றத்தில் இந்திய குடியரசுத் தலைவரை பார்க்க விரும்புகிறேன். இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒரு பெண், அவர் பழங்குடியின சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு மாற்றும்போது அவரும் இங்கு இருந்திருந்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும்" என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும் படிக்க | சனாதனம் என்பது எச்.ஐ.வி போன்றது-ஆ.ராசா பேச்சு! 

விநாயக சதுர்த்தி நாளன்று, நல்ல நாள் என்பதால், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகல் அனைத்தும் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது நடைபெற்ற நிகழ்வில் பல நடிக நடிகர்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு வந்திருந்தனர் என்பதை அடுத்து சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த சர்ச்சை உச்சத்தில் இருந்தபோது உதயநிதி ஸ்டாலின் சொன்ன கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ”சனாதன தர்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் சார்பாக நான் பேசினேன். சனாதன தர்மம் மற்றும் சமூகத்தில் அதன் எதிர்மறையான தாக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் விரிவான எழுத்துக்களை எந்த மன்றத்திலும் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்பதன் தாக்கம், தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்ற 

மேலும் படிக்க | “ஒன்பதரை ஆண்டுகளில் மோடி என்னத்தை கிழித்து உள்ளார்?” உதயநிதி ஸ்டாலின் காரசார பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News