சவூதி இளவரசர் இந்தியா வருகை; CRPF தாக்குதல் குறித்து பேச்சுவார்த்தை..

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார்.  பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்!

Last Updated : Feb 19, 2019, 08:38 AM IST
சவூதி இளவரசர் இந்தியா வருகை; CRPF தாக்குதல் குறித்து பேச்சுவார்த்தை.. title=

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார்.  பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்!

இந்தியா வரும் சல்மான் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கிய வெளியுறவுத்துறை அதிகாரிகள், சல்மானின் வருகையால் இந்தியா-சவூதி அரேபியா இடையிலான உறவுகள் மேம்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு சவூதிக்கு சென்ற போது இருதலைவர்களிடையே நீடித்த நட்புறவை வெளியுறவுத்துறை நினைவுகூர்ந்துள்ளது. ரத்தினகிரி சுத்திகரிப்பு திட்டத்துக்காக சவூதியின் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.

சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது , உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.கடந்த காலங்களில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய குற்றவாளிகளை இந்தியாவிடம் சவூதி அரசு ஒப்படைத்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் சென்ற சவூதி இளவரசர் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இருநாடுகள் இடையே ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இரு நாடுகளும் உடன்படிக்கை செய்துக் கொண்டன.புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடம் சவூதி அரேபியா அரசு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

 

Trending News