புதுடெல்லி: தப்லீஹி ஜமாஅத்தின் (Tablighi Jamaat) தலைமை “ஆர்எஸ்எஸ் (RSS) போன்று விவேகமான பொறுப்பைக் காட்டியிருக்க வேண்டும்… அதன் நிகழ்ச்சி திட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும்” என்று சங்க சா சர்கார்யவா (இணை பொதுச் செயலாளர்) மன்மோகன் வைத்யா (Manmohan Vaidya) திங்களன்று தெரிவித்தார்.
வீடியோ இணைப்பு வழியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய வைத்யா [Manmohan Vaidya], சமூக தொலைதூரத்திற்கான அரசாங்கத்தின் அழைப்பைக் கருத்தில் கொண்டு RSS சங்கம் பல திட்டங்களை ரத்து செய்துள்ளது என்றார். ஆனால் தப்லீஹி ஜமாஅத்தின் நடத்தையை அவர் விமர்சித்தபோதும், முஸ்லிம் சமூகம் ஆற்றிய பங்கை அவர் பாராட்டினார். கடந்த மாதம் அதன் நிஜாமுதீன் (Nizamuddin) தலைமையகத்தில் கோவிட் -19 நோய்த்தொற்றின் மையமாக மாறியதாகக் கூறப்பட்ட தப்லீகி உறுப்பினர்களின் மறைவிடங்கள் தான் கொரோனா அதிக அளவில் பரவத் தூண்டிவிட்டது என்று அவர் கூறினார்.
"தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட தப்லிகி ஜமாஅத் நிகழ்வின் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிச்சயமாக அதிகரித்து வருகின்றன. எல்லோரும் அதற்கு உடன்படுகிறார்கள், ”என்றார் வைத்யா. ஏனென்றால் அதுக்குறித்த புள்ளிவிவரங்கள் உண்மையைச் சொல்கின்றன.
அவர்களின் தலைமை சரியான நேரத்தில் ஒரு முடிவை எடுத்து அதை சரியான நேரத்தில் ரத்து செய்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும், ”என்று அவர் மேலும் கூறினார்.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்தியாவின் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் 30 சதவீதம் தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மூலம் பரவியுள்ளது. 17 மாநிலங்களில் பரவியுள்ள 1,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் கூட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளன. தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 22,000 பேர் இதுவரை தனிமைப் படுத்தப்பட்டு உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தப்லிகி ஜமாஅத்தின் நடத்தையை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயன்ற வைத்யா, அதன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான அகில் பாரதிய பிரதினிதி சபையானது (Akhil Bharatiya Pratinidhi Sabha - ஏபிபிஎஸ்) கோவிட் -19 நெருக்கடியை கருத்தில் கொண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த அனைத்து கூட்டத்தை சங்கம் ரத்து செய்துள்ளது என்றார். .
எங்கள் கூட்டம் மார்ச் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டது. நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க இருந்தனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை, லாக்-டவுன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஒரு தீவிர முடிவை எடுத்து அதை ரத்து செய்தது என்று அவர் கூறினார்.
ஆர்எஸ்எஸ் தலைமையின் தலைவர்கள் காட்டிய விவேகமான பொறுப்பு ... இந்த தப்லிகிகள் காட்டியிருந்தால், இது தவிர்க்கப்பட்டிருக்கும்" என்று வைத்யா மேலும் கூறினார்.
அந்த நேரத்தில் தப்லிகிஸால் ஒரு முடிவை எடுக்க முடியாவிட்டாலும், அவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு மருத்துவ ஊழியர்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் கூட, பலர் பொறுப்புடன் செயல்பட்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் ஒரு பகுதியினர் பொறுப்பில்லாமல், அவர்கள் உணர்ச்சி அற்றவர்களாகவும் விபரீதமாகவும் இருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். இருப்பினும், தப்லீஜி உறுப்பினர்களின் நடத்தை முழு முஸ்லிம் சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இல்லை.
மோடி அரசாங்கம் மேற்கொண்ட பணிகளைப் பாராட்டிய அவர், சமுதாயமும் அதைச் செய்ய வேண்டியது அவசியம் என்றார். எல்லாவற்றையும் அரசாங்கத்தால் செய்ய முடியாது. மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.