ஆட்சி அமைக்க இந்துத்துவா பிம்பத்தை தூக்கியெறிந்த சிவசேனா...

மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க சிவசேனா தற்போது 'மதச்சார்பற்ற' கட்சியாக தயாராகி உள்ளது. 

Last Updated : Nov 21, 2019, 04:20 PM IST
ஆட்சி அமைக்க இந்துத்துவா பிம்பத்தை தூக்கியெறிந்த சிவசேனா... title=

மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க சிவசேனா தற்போது 'மதச்சார்பற்ற' கட்சியாக தயாராகி உள்ளது. 

ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, 'இந்துத்துவா' என்று கோஷமிட்ட சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், சிவசேனா ஏற்கனவே மதச்சார்பற்ற கட்சியாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா தனது 'இந்துத்துவா' பிம்பத்தை ஒதுக்கி "மதச்சார்பற்றவர்" என்று நிலைக்கு வர வேண்டும் என காங்கிரஸ் நிர்பந்தித்தது.

ஊடக அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் உரையாடினார். இச்சந்திபின் போது பவர் "பொதுவான குறைந்தபட்ச திட்டத்தின்" கீழ் சிவசேனாவுடன் மதச்சார்பற்றவராக இருப்பதைப் பற்றி பேசியுள்ளார். சிவசேனாவின் தலைவரும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு நிபந்தனையையும் சிவசேனா ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்கவில்லை என்பது இதன் மூலம் நமக்கு தெரிகிறது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தின் கீழ் இந்த மாத தொடக்கத்தில் அயோத்திக்கு வருகை தரும் திட்டத்தை உத்தவ் தாக்கரே ரத்து செய்ததாக தற்போது நம்பப்படுகிறது. ஆக., முதல்வர் நாற்காலியில் தனது 'இந்துத்துவா' சித்தாந்தத்தை சமரசம் செய்ய சிவசேனா தயாராக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுகிறது. 

மறுபுறம், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் மற்றும் சிவசேனாவுடன் அரசாங்கத்தை அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. வியாழக்கிழமை, காங்கிரஸ் நிர்வாகி கூட்டம் நடைபெற்றது, இதில் சிவசேனாவுடன் மகாராஷ்டிராவில் கூட்டணி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

சிவசேனாவுடனான கூட்டணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு பச்சை சமிக்ஞை அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாகக் கூட்டத்திற்குப் பிறகு, மகாராஷ்டிரா பொறுப்பாளர் மல்லிகார்ஜூன் கார்கே, "நாங்கள் தேசியவாதக காங்கிரஸ் கட்சியுடன் எங்கள் உரையாடல் குறித்து காரிய கமிட்டிக்கு அறிவித்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

Trending News