புதுடெல்லி: கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டை பாடாய் படுத்தி வருகிறது. மக்கள் பெரும் அளவில் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், கொரோனா வைரஸ் விலங்குகளிலும் அதிகமாகப் பரவத் தொடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக ஆசிய சிங்கங்கள் இறந்துள்ளதாக பதிவிடப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. விலங்குகளுக்கு மத்தியில் வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி நடவைக்கையாக, சுற்றுலாப் பயணிகளுக்கான தேசிய பூங்காக்கள் / சரணாலயங்கள் மற்றும் விலங்குகளுக்கான பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மூடுமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டது.
சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் வனவிலங்கு பிரிவு வெளியீட்டின் படி, தேசிய பூங்காக்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தேசிய பூங்காக்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பணியாளர்கள் / கிராமவாசிகள் போன்றோரின் நடமாட்டத்தில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் விதித்துள்ள பிற நிபந்தனைகளையும் கடைபிடிக்குமாறு அமைச்சகம் கோரியுள்ளது.
ALSO READ: ஆணழகனையும் விட்டு வைக்காத கொரோனா; சர்வதேச Body Builder ஜகதீஷ் லாட் மரணம்
தேசிய பூங்காக்கள் / சரணாலயங்கள் மற்றும் விலங்குகளின் (Animals) பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் விலங்குகளிடையே கொடிய தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகளையும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பையும் இந்த வெளியீட்டில் அமைச்சம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலைத் தடுக்க, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விலங்குகளின் அவசர சிகிச்சைக்கு அத்தியாவசிய சேவைகளை அமைக்கவும், அவற்றை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பாதுகாப்பாக விடுவிக்கவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான தொடர்பை குறைக்கவும் வெளியீடு கேட்டுக்கொண்டுள்ளது. நோய்க்கான அறிகுறி இருக்கும் மற்றும் அறிகுறியற்ற கேரியர்கள் (மனிதர்கள்) வாயிலாக விலங்குகளுக்கு தொற்று பரவி இருப்பதாக பல பதிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.
COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை என்பதால், பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதர்களின் தொடர்பையே சில காலத்திற்கு குறைப்பது, தொற்று பரவாமல் இருக்க உதவும் என வெளியீட்டில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மிருகங்களுக்கிடையே தொற்று அதிகமாகப் பரவி விட்டால், பின்னர் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகி விடும் என்றும், அதை துவக்கத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். வாயில்லா ஜீவன்களுக்கு தொற்று இருக்கிறதா என்பதை பரிசோபிப்பதும், தொற்று இருந்தால், சிகிச்சை அளித்து குணப்படுத்துவதும் மிகவும் சிக்கலான நடைமுறைகளாக இருக்கும். ஆகையால், துவக்கத்திலேயே இதற்கான கடினமான நடவடிக்கைகளை எடுத்து வரும் முன் காப்பதே சிறந்த வழியாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ALSO READ: COVID Cases Spike: இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் கோவிட் பாதிப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR