எம்பிபிஎஸ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ நுழைவு தேர்வுகளை மாநில அரசு நடத்த கூடாது: உச்சநீதிமன்றம்

Last Updated : May 11, 2016, 11:39 AM IST
எம்பிபிஎஸ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ நுழைவு தேர்வுகளை மாநில அரசு நடத்த கூடாது: உச்சநீதிமன்றம் title=

மருத்துவம் சார்பாக நடைபெறும் நுழைவுத் தேர்வை எதிர்த்து மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த முடியாது எனவும், மத்திய அரசுக்கு தான் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி எனவும், நுழைவுத் தேர்வுகளின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்வு ஜூலை 24ம் தேதி வைத்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுகளை வேற தேதிக்கு மாற்றிக்கொள்ள மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ அதிகாரம் உள்ளது. மேலும் இந்த விசியத்தில் உச்சநீதி்மன்றம் குறிக்கிடாது என்று நீதிபதிகள் கூறினார்.

மேலும் இந்த நுழைவுத் தேர்வு சிறுபான்மையினரை கருத்தில் கொண்டு நடைபெறும் எனவே இதன்முலம் இடஓதுக்கீட்டையும் மற்றும் சிறுபான்மையினரையும் பாதிக்காது என்றும் குறிப்பிட்டன.

Trending News