கிட்டத்தட்ட முழு நாடும் கொரோனா வைரஸின் பிடியில் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 69 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொடர்பாக நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் மக்கள் ஊரடங்கை முறையாக பின்பற்ற வேண்டுமென்றும், உத்தரவைக் கடைபிடிக்கவில்லை என்றால் மிகக்கடுமையான நடவடிக்கையாக கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பிரச்னையை தீவிரமாக எடுத்துக்கொண்டு மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.