கிரெடிட் கார்டுல இதையெல்லாமா வாங்குவாங்க? EMIலயும் கிடைக்கும் அல்போன்சா மாம்பழம்

Alphonso Mango On EMI: அல்போன்சோ மாம்பழத்தை மாதாந்திர தவணையில் வாங்கலாம் என்ற செய்தி விநோதமாக இருக்கலாம். ஆனால் இந்த மாம்பழத்தை கிரெடிட் கார்டிலும் வாங்கலாம் என்பது தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 8, 2023, 08:51 PM IST
  • கிரெடிட் கார்டில் இஎம்ஐயில் கிடைக்கும் மாம்பழம்
  • மாம்பழமாம் மாம்பழம் இது அல்போன்ஸா மாம்பழம்
  • எவ்வளவு விலை இருந்தா இஎம்ஐயில வாங்கும் ஆப்ஷன் இருக்கும்?
கிரெடிட் கார்டுல இதையெல்லாமா வாங்குவாங்க? EMIலயும் கிடைக்கும் அல்போன்சா மாம்பழம் title=

கோடை காலம் வரும்போது அதிகம் விரும்பப்படும் பழங்களில் ஒன்று மாம்பழம். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தில் பல வகைகள் உண்டு. நாளுக்கு நாள் பழங்களின் விலைகள் அதிகரித்து வருவது போலவே, மாம்பழங்களின் விலையும் அதிகரித்துவிட்டதா என்று தோன்றுகிறதா? உண்மை என்ன என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். ஃபோலேட், பீட்டா கெரட்டின், இரும்பு, வைட்டமின்கள் ஏ, வைட்டமின்கள் சி, கால்சியம், ஜிங்க் மற்றும் வைட்டமின் ஈ போன்ற முக்கிய மூலப்பொருட்கள் நிறைந்துள்ள மாம்பழங்களில் பல வகைகள் உள்ளன. 

மாம்பழத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள மாம்பழம் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.

செந்தூரம், காளையபாடி, அல்போன்சா, மனோரஞ்சிதம், நாட்டுக்காய், மல்கோவா, காசா, ஊறுகா காய், கிளி மூக்கு மாம்பழம், பங்கனபள்ளி, நார் மாம்பழம், நீலம் மாம்பழம், கல்லா மாங்காய், ருமேனியா, இமாயத், இமாம் பசந்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாம்பழங்கள் உள்ளன.

மேலும் படிக்க | Boney Kapoor: 66 கிலோ வெள்ளி பறிமுதல்! நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தின் மீது நடவடிக்கை?

உலகம் முழுவதும் பிரபலமான அல்போன்சா 
ஹாபஸ் என்று அழைக்கப்படும் அல்போன்சா மாம்பழத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மாம்பழம் அதன் சுவைக்காக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. அதன் தேவையும் மிக அதிகம் என்பதால், அல்போன்சா மாம்பழம் மிகவும் விலை உயர்ந்தது.

மகாராஷ்டிராவில் உள்ள தியோகர் மற்றும் ரத்னகிரியில் விளையும் அல்போன்சாவின் விலை சில்லறை சந்தையில் ஒரு டஜன் ரூ.800 முதல் ரூ.1,300 வரை உள்ளது. அதன் சிறந்த சுவை மற்றும் குறைந்த உற்பத்தி காரணமாக, அதன் விலை பெரும்பாலும் சாதாரண மக்களுக்கு எட்டாததாக இருக்கும்.
 
EMI இல் அல்போன்சா மாம்பழம்
இந்த ஸ்பெஷல் மாம்பழத்தின் ருசியை சாமானியர்களும் சென்றடையும் வகையில், கவுரவ் சன்ஸ் என்ற தொழிலதிபர் தனித்துவமான சலுகையை வழங்கியுள்ளார். அவர் அல்போன்சாவை எளிதான மாதாந்திர தவணையில் விற்கத் தயாராக இருக்கிறார், அதாவது விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருள் போன்றே விலை அதிகமான அல்போன்ஸா மாம்பழத்தையும் தவணை முறையில் விற்கிறார்.

மேலும் படிக்க | வெறும் 1 டீஸ்பூன் இந்த எண்ணெய் போதும்..முடி அடர்த்தியா வளரும்

வர்த்தக நிறுவனமான குருகிருபா டிரேடர்ஸ் இந்த மாம்பழத்தை EMIஇல் விற்கிறது. நாட்டிலேயே மாம்பழத்தை தவணை முறையில் விற்கும் முதல் நிறுவனம் இது. ஃப்ரிட்ஜ், ஏசி, எலெக்ட்ரானிக் உபகரணங்களை இஎம்ஐயில் வாங்கலாம் என்றால் மாம்பழம் ஏன் வாங்கக்கூடாது, இந்த மாம்பழத்தை எல்லோரும் வாங்கலாம் என்று நினைத்தோம் என்று 
 
தவணைகளுக்கு கிரெடிட் கார்டு தேவை
இஎம்ஐயில் மொபைல் போன் வாங்குவது போல் அல்போன்சாவை தவணை முறையில் வாங்கலாம். இதற்கு வாடிக்கையாளர் ஒரு கிரெடிட் கார்டை வைத்திருக்க வேண்டும், பின்னர் கொள்முதல் விலை மூன்று, ஆறு அல்லது 12 மாதங்களுக்கு தவணையாக மாற்றப்படும்.

இருப்பினும், அல்போன்சாவை சன்ஸ் கடையில் EMI இல் வாங்க, குறைந்தபட்சம் 5,000 ரூபய்க்கு வாங்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள இதுவரை நான்கு பேர் முன் வந்துள்ளனர் என்று அவர் கூறினார். அல்போன்சாவை இஎம்ஐயில் விற்கும் பயணம் இவ்வாறு தொடங்குகிறது.

மேலும் படிக்க | கல்லீரலை பாழாக்கும் 6 உணவுகள்; கட்டாயம் தவிர்த்துவிடுங்கள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News