பெங்களூரு: திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போனி கபூரின் வெள்ளிப் பொருட்களை மத்திய தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தாவங்கரேயில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 39 லட்சம் மதிப்புள்ள 66 கிலோ பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிஎம்டபிள்யூ காரில் இருந்து வெள்ளிப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளிப்பொருட்கள் சென்னையில் இருந்து மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. ஐந்து பெட்டிகளில் இருந்த வெள்ளிப் பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளிக் கிண்ணங்கள், வெள்ளிக் கரண்டி, வெள்ளி டம்ளர் மற்றும் வெள்ளித் தட்டுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற விவரம் போனிக்கபூருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Haeil-2: நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானத்தை பரிசோதித்தது வடகொரியா
இது தொடர்பாக தேவேங்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிரைவர் சுல்தான் கானுடன் காரில் இருந்த ஹரி சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் அந்த கார் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனம் போனி கபூருக்கு சொந்தமானது. போலீசார் விசாரித்தபோது, அந்த கார் போனி கபூருக்கு சொந்தமானது என்பதை ஹரி சிங் ஒப்புக்கொண்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கும் போனி கபூரின் குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ