தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரும் முடிவும் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணமும்....

TN Govt vs Governor RN Ravi: ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவெடுத்திருக்கும் நிலையில் அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி செல்கிறார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 3, 2022, 09:50 AM IST
  • தமிழக ஆளுநரின் திடீர் டெல்லி பயணம்
  • ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு
  • திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்பிகளுக்கு அதன் பொருளாளர் எம்பி டி.ஆர்.பாலு கடிதம்
தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரும் முடிவும் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணமும்.... title=

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து, ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திர்நுதது. இந்த நிலையில், ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவெடுத்திருக்கும் நிலையில் அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி செல்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

ஆளுநர் ஆர். என் ரவி
தமிழ்நாட்டில், ஆளுநருக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் பல விஷயங்களில் கருத்து மோதல் உள்ளது. முக்கியமாக துணை வேந்தர்களை முதல்வரே நியமிக்கும் புதிய வேந்தர் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை.

அண்மையில், கோவையில் நிகழ்ந்தது குண்டுவெடிப்பு சம்பவம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ -விடம் ஒப்படைப்பதில் நான்கு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது கவலை தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பாஜக நிர்வாகிகள் பேசுவது போல ஆளுநர் பேசி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.

மேலும் படிக்க | தென்னகத்து போஸ் முத்துராமலிங்க தேவர் - மு.க. ஸ்டாலின் ட்வீட்

என்ன பேசுகிறார் ஆளுநர் ஆர். என் ரவி?
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அரசுடன் ஆளுநர்கள் மோதும் கலாச்சாரம் தொடர்வது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் தமிழிசைக்கு மாநில முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது.

அதேபோல் கேரளாவில் ஆரிப் கானுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கு மோதல் நிலவி வருகிறது. அங்கு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சொல்லும் அளவிற்கு ஆளுநர் அத்துமீறி வருகிறார்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்திருந்தது. அதற்கு முன்னதாக, ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது.  

மேலும் படிக்க | 'எங்கள் நிலத்தை போலீஸ் அதிகாரியே அபகரித்துள்ளார்’: குற்றம் சாட்டும் NRI தம்பதி

மேலும் படிக்க | தமிழகத்தில் தான் அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை நடக்கிறது: திருமாவளவன் வருத்தம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News