CBSE 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரும் மனு மே 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 28, 2021, 01:38 PM IST
  • சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
  • இதன் விசாரணை திங்கள், அதாவது மே 31 அன்று நடைபெறும்.
CBSE 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரும் மனு மே 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு title=

 

புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது. 

ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியது.

சிபிஎஸ்இ (CBSE) 12ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இப்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு (CBSE)  ரத்து செய்யப்படுமா என்ற தீர்ப்பு 2021 மே 31 அன்று வெளிவரும். ஜூன் 1 ம் தேதி, 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் மனுதாரரிடம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள்எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு, மனுதாரர் மம்தா ஷர்மாவிடம், விசாரணைக்கு முன், மனுவின் நகலை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ வழக்கறிஞர்களுக்கு  கொடுத்துள்ளீர்களா என்று கேட்டார். முன்கூட்டியே நகலை இன்று வழக்கறிஞர்களுக்கு அனுப்புவதாக என்று மம்தா சர்மா தெரிவித்தார். மனுதாரர், மனுவின் நகலை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ வக்கீல்களுக்கு விசாரணைக்கு முன்னதாக அனுப்ப வேண்டும் என்று என்பதால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

வழக்கறிஞர் மம்தா சர்மா பன்னிரண்டாவது வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் COVID -19   நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால், முடிவு தாமதமாகலாம் என்று கூறினார். இது பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், கொரோனா தொற்றுநோய்களில் மில்லியன் கணக்கான குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எனவே தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும். அதேசமயம், பன்னிரெண்டாம் வகுப்பின் முடிவுகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ஐசிஎஸ்இ) நிர்ணயித்த கால வரம்பிற்குள் அப்ஜெக்டிவ் முறையின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.

ALSO READ | CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News