தேசிய குடிமக்களின் பதிவு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) ஆகியவற்றுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை, இதை நான் இன்று தெளிவாகக் கூறுகிறேன் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் அதன் புதுப்பிப்புக்கு 3,941.35 கோடி ரூபாய் செலவை அறிவித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின்படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம் நாட்டின் ஒவ்வொரு குடியிருப்பாளரின் விரிவான அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதாகும்.
இந்நிலையில் இன்று செய்திநிறுவனமான ANI-க்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ப்ரத்தியேக பேட்டியில்., இது குறித்து எந்த விவாதமும் இப்போது இல்லாததால் (பான்-இந்தியா NRC) இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, பிரதமர் மோடி சொல்வது சரிதான், இது குறித்து அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இதுவரை எந்த விவாதமும் நிகழவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், NPR புதுப்பிக்கப்படுவதை மறுத்த கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில், பினராயி விஜயன் மற்றும் மம்தா பானர்ஜி இருவரையும் அபிவிருத்தி திட்டங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டாம் என்று ஷா வேண்டுகோள் விடுத்தார். "இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டாம், தயவுசெய்து உங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று இரு முதலமைச்சர்களிடமும் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏழைகளை உங்கள் அரசியலுக்காகவே வளர்ச்சித் திட்டங்களிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமைச் சட்டம் குறித்து அரசாங்கத்திடமிருந்து தகவல் தொடர்பு குறைபாடு உள்ளதா என்பது குறித்து பேசிய ஷா, தகவல்தொடர்புகளில் சிறிது இடைவெளி இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். நாடாளுமன்றத்தில் தனது உரை தெளிவானது மற்றும் சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் மீண்டும் வலியுறுத்துகையில்., "NPR-ல் சில பெயர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம், இருப்பினும் இது அவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்படாது, ஏனெனில் இது NRC-ன் செயல்முறை அல்ல. NRC ஒரு வித்தியாசமான செயல். யாரும் அதை செய்ய மாட்டார்கள் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மேலும் NPR காரணமாக குடியுரிமையை இழக்கவும் நேரிடுவதில்லை " என குறிப்பிட்டார்.
AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி CAA-ஐ விமர்சித்ததில், ஷா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எப்போதும் எதிர்க்கிறார் என்று கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "சூரியன் கிழக்கிலிருந்து உதயமாகிறது என்று நாங்கள் சொன்னால், ஒவைசி ஜி அது மேற்கிலிருந்து எழுகிறது என சொல்வார், அவர் எப்போதும் எங்கள் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்" என குறிப்பிட்டார். மேலும் CAA-க்கு NRC உடன் எந்த தொடர்பும் இல்லை என்று நான் மீண்டும் அவருக்கு உறுதியளிக்கிறேன் என்று ஷா மேலும் கூறினார்.
#WATCH Home Minister Amit Shah speaks to ANI on National Population Register, NRC/CAA and other issues. https://t.co/g4Wl8ldoVg
— ANI (@ANI) December 24, 2019
முன்னதாக, செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அரசாங்கத்தின் முடிவை அறிவித்தார். NPR ஒரு சுய அறிவிப்பாக இருக்கும் என்றும் அதற்கு எந்த ஆவணமும் அல்லது பயோ மெட்ரிக் தேவையில்லை என்றும் ஜவடேகர் வலியுறுத்தினார்.
சட்டத்தின்படி, NPR-க்கான ஒரு 'வழக்கமான குடியிருப்பாளர்' என்பது, ஒரு பகுதியில் குறைந்தது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த நபர் அல்லது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வாழ விரும்பும் நபர், என நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் NPR-ல் பதிவு செய்வது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது NPR-ப் புதுப்பிப்பதற்கான ஒரு வழக்கமான செயல்முறையாகும், இது வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பயிற்சிக்கு மேலும் துணைபுரியும், மேலும் அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் இலக்கு நன்மைகளை வழங்கவும் உதவும். இந்த செயல்முறை முன்னர் 2010 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தற்போதைய ஆய்வுகள் கடந்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் NPR-ன் கீழ் கிடைக்கும் தரவு / தகவல்களை மேலும் புதுப்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.