கன்னட நடிகர் மற்றும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் மறைவையொட்டி கர்நாடகாவில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது!
பிரபல கன்னட நடிகர் மற்றும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் சனி அன்று இரவு மாரடைப்பால் காலமானார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தத்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
66-வயது ஆகும் அம்பரீஷ் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். நாகரஹாவு, பங்காரத கள்ள, சீதையல்ல சாவித்ரி, மகதேஸ்வர பூஜாபல, சுபமங்களா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.
Shri Ambareesh will always be remembered for his memorable performances as an actor and extensive contribution to politics. He was a strong voice for Karnataka’s welfare, at the state and central level. Pained by his demise. Condolences to his family & admirers: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 25, 2018
We are shocked and saddened to hear about the untimely passing of former union minister, veteran actor and Congress leader Dr. Ambareesh. Our thoughts and prayers are with his family. pic.twitter.com/avwM2rwqiv
— Congress (@INCIndia) November 24, 2018
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆன இவர், 3 முறை லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2006 அக்டோபர் மாதம் முதல் 2008 வரை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர், பின்னர் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அனுதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியினை 2008-ஆம் ஆண்டு துறந்தார்.
நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
A wonderful human being ... my best friend ... I have lost you today and will miss you ... Rest In Peace #Ambrish
— Rajinikanth (@rajinikanth) November 24, 2018
42 வருடங்களாக என் நண்பர் திரு.அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 25, 2018
பெங்களூரில் வைக்கப்பட்டிருக்கும் அம்பரீஷ் உடலுக்கு, அம்மாநில முதல்வர் குமாரசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.