மக்களவைத் தேர்தல்: மோடிக்கு போட்டியாக இருக்கப்போவது இந்த 3 பெண்களா?

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். 

Last Updated : Feb 2, 2019, 03:29 PM IST
மக்களவைத் தேர்தல்: மோடிக்கு போட்டியாக இருக்கப்போவது இந்த 3 பெண்களா? title=

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். 

இந்நிலையில்  வெவ்வேறு சமூக பிண்ணனியிலிருந்து அரசியலுக்கு வந்த மூன்று பெண் தலைவர்கள் பிரதமராக பங்கேற்பதற்கு மிகப்பெரிய அச்சுறுத்துத்தலாக இருப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அந்த மூன்று பெண் தலைவர்கள், பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி.

இதில் பிரியங்கா காந்தி இந்தியாவை ஆட்சி செய்த நேரு குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் கடந்த ஜனவரி மாதம் அரசியலில் நுழைந்தார். மீதமுள்ள இரண்டு அரசியல் தலைவர்களும் முத்த பெண் தலைவர்கள் ஆவார்கள். மம்தா - மாயாவதிக்குள் எந்த வித கூட்டணியும் தற்போது வரை இல்லாத நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து மிகப்பெரிய அளவிலான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட எதிர்க்கட்சிகள் அதிகமான வலிமைமிக்க பெண் தலைவர்களை கொண்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும், பாஜகவிலிருந்து விலகியவருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நாட்டின் முக்கிய மாநிலங்களை ஆட்சி செய்யும் வாய்ப்பை பாஜக இழந்துள்ளதால் அவர்கள் வருத்தத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி, மாயாவதி, மம்தா ஆகிய மூவரும் இணைந்து ஒரு வலுவான எதிர்க்கட்சி கூட்டணியில் இருப்பதால் கூடுதல் பலம் என்று கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால ஆட்சியை  முடிவுக்கு கொண்டு வந்த மம்தாவிற்கு இருக்கும் ஆதரவிற்கு சமீபத்தில் பிரம்மாண்ட பேரணியே ஆதாரமாக உள்ளது. தலித்கள், தாழ்ந்த வகுப்பினர் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவு மாயாவதிக்கு இருப்பதால் அவரும் அதிக வாக்காளர்களை ஈர்க்கும் சக்தியாக மாறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வரவுள்ள மக்களவைத் தேர்தலில் யார் பிரதமராக உள்ளார் என்பதை அனைவரும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News