1. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் சர்ச்சை கருத்து:
இந்தியா பாதுகாப்பற்ற நாடு ஆகிவிட்டதால் அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ல் பாகிஸ்தானுடனான தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு சென்றது. அப்போது லாகூரில் நடக்க இருந்த போட்டிக்காக இலங்கை வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்தன. இந்த சம்பவத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றால், அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற கருத்து எழுந்தது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கிவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதால் விளையாட ஒப்புக்கொண்ட இலங்கை அணி அங்கு மீண்டும் அண்மையில் சென்றது.
தற்போது இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அப்போது உத்தரப் பிரதேசத்திலும் தில்லியிலும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. இதை மையமாக வைத்து பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளரான மியான்தத் இந்தியாவுக்கு எதிராக பேசியுள்ளார்.
2. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவின் கருத்தால் கோபமடைந்த இந்து அமைப்புகள்:
முதல்வர் யோகி அணிந்திருக்கும் காவி உடை பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவி உடை குறித்து பிரியங்காவின் சர்ச்சைக்குரிய அறிக்கை குறித்து இந்து அமைப்புகள் கோபமடைந்துள்ளன.
இதுகுறித்து ராமர் கோயில் தரப்பு தலைவர் மகரிஷி தர்மதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரியங்கா காந்திக்கு காவி நிறமும், ஹிந்து மதத்தைப் பற்றியும் தெரியாது. அதனால்தான் அவர் இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று கூறியுள்ளார். மேலும் ஆஞ்சநேய பக்தரான யோகி குறித்த தேவையற்ற கருத்துக்களை வெளியிட்ட பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். பிரியங்காவும் ராகுலும் வேடிக்கையாக அரசியல் செய்கிறார்கள் என்று வாராணசியில் உள்ள பிரபல ஹனுமான் கோயிலின் தலைமை அர்ச்சகர் மகரிஷி ஆனந்த் கிரி கூறியுள்ளார்.
3. நாட்டின் முதல் முப்படைத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்:
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் நாட்டின் முதல் முப்படைத் தலைமை தளபதியென்ற சி.டி.எஸ் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் முதல் சி.டி.எஸ்ஸாக பிபின் ராவத்தை நியமிக்க மத்திய அரசு வரைவு அறிவிப்பை வெளியிட்டது. ராணுவத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் இன்று ஓய்வு பெறும்நிலையில் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே பிபின் ராவத்துக்கு முப்படை சார்பில் சிறப்பான பிரிவு உபசாரம் வழங்கப்படும். முப்படை அணிவகுப்பில் அவருக்கு மரியாதை செய்யப்படும். ராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே பிபின் ராவத் சி.டி.எஸ் பொறுப்பை ஏற்பார். ராணுவ நடவடிக்கைகளின் போது சீப் ஆப் ஸ்டாஃப் என்ற பொறுப்பில் முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பார்.
4. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி; மற்றொருவர் பலத்த காயம்:
தெலுங்கானாவின் ஆடிலாபாத் மாவட்டம் வூட்னூரில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். போலீஸார் விரட்டியதில் தப்பி ஓடும் போது இரண்டு இளைஞர்கள் பேன்ட் பாக்கெட்டுகளில் ஒளித்து வைத்திருந்த வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றவர் பலத்த காயமடைந்தார். இருவரும் மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வூட்னூரில் உள்ள கடிகுடாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பைக்கிலிருந்து மேலும் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
5. பான் கார்டை ஆதார் உடன் இணைக்க நாட்கள் நீட்டிப்பு:
இதுவரை பான் கார்டை ஆதார் உடன் இணைக்க முடியாதவர்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியமான, சிபிடிடி (CBDT) பெரிய சலுகையை அளித்துள்ளது. அதன்படி இப்போது உங்கள் பான் கார்டை ஆதாருடன் 2020 மார்ச் 31 வரை இணைக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை சிபிடிடி 8 வது முறையாக தற்போது நீட்டித்துள்ளது.
முன்னதாக, பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுவரை (டிசம்பர் 31) அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிபிடிடி இந்த காலக்கெடுவை திங்கள்கிழமை இரவு நீட்டித்திருப்பது மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக உள்ளது.
6. அமெரிக்காவின் கார் விபத்தில் ஹைதராபாத் இளம்பெண் பலத்த காயம்:
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள க்ரோக்கரி டவுன்ஷிப் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். மிச்சிகனின் லான்சிங் பகுதியில் வசிப்பவர் சரிதா ரெட்டி அயிலா. 25 வயதான அவர் கார்விபத்தில் படுகாயமடைந்தார்.
சிகிச்சைக்காக மஸ்கெகோனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரிதா ரெட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணின் மூளைத்திறனும் உடலும் இனி வேலை செய்ய இயலாது. ஆனால் உயிர் பிழைத்துள்ளார் என்று கூறினர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது