பிரதமர் முன்னிலையில் திரிபுரா முதல்வர் பதவியேற்பு!

திரிபுரா முதல்வராக வரும் பிப்.,9 ஆம் நாள் பிப்லால் குமார் தீப் பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

ANI | Updated: Mar 6, 2018, 04:28 PM IST
பிரதமர் முன்னிலையில்  திரிபுரா முதல்வர் பதவியேற்பு!
Pic Courtesy: twitter/@ANI

திரிபுரா முதல்வராக வரும் பிப்.,9 ஆம் நாள் பிப்லால் குமார் தீப் பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

59 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டமன்ற தேர்தலில் 42 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடம் பாஜக ஆட்சி பிடித்தது. இதனையடுத்து வரும் 9 ஆம் நேதி காலை 10.30 மணியளவில் பாஜக எம்எல்ஏ பிப்லால் குமார் தீப் அவர்கள் முதல்வராக பதவியேற்கின்றார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதகா பிப்லால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் களந்துக்கொள்வார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை, திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பிப்லால் பதவியேற்பார் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.