புதிய மோட்டார் வாகன விதிகளை மீறியதற்காக லாரி ஓட்டுனருக்கு ₹.6 லட்சம் அபராதம்!

ஒடிசாவில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக லாரி உரிமையாளர் ரூ .6.53 லட்சம் அபராதம் விதித்தார்

Last Updated : Sep 14, 2019, 04:39 PM IST
புதிய மோட்டார் வாகன விதிகளை மீறியதற்காக லாரி ஓட்டுனருக்கு ₹.6 லட்சம் அபராதம்! title=

ஒடிசாவில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக லாரி உரிமையாளர் ரூ .6.53 லட்சம் அபராதம் விதித்தார்

மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஒடிசாவில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக லாரி உரிமையாளர் ஒருவருக்கு ரூ .6.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடந்தாலும், புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பழைய மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாகாலாந்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த லாரிக்கு, சம்பல்பூரில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தின் அமலாக்க குழு அபராதம் விதித்தது, அந்த வாகனம் பல போக்குவரத்து விதிகளை மீறியதாக குற்றங்களை கண்டறிந்தது. இந்த டிரக்கின் உரிமையாளர் நாகாலாந்தின் பெக் டவுனில் உள்ள பெத்தேல் காலனியைச் சேர்ந்த ஷைலேஷ் சங்கர் லால் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதே சமயம் டிரைவர் தில்லிப் கர்தா ஜார்சுகுடாவில் வசிப்பவராக இருக்கிறார்.

இதனால், RTO ஓட்டுநர் மற்றும் டிரக் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளது. சாலை வரி இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கும், வாகன காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் செல்லாததற்கும், காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை மீறுவதற்கும், பொருட்களின் வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றதற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

 

Trending News