தாங்தார் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்ய பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் பலி!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம், டங்தார் செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கு உதவி செய்யும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் ஒருவரும் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பகுதியில், இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்து வருகிறது.
Indian Army sources: Two Indian soldiers killed in ceasefire violation, along the Line of Control in Tangdhar sector (Jammu and Kashmir), when Pakistan Army was pushing infiltrators into Indian territory. Indian Army is retaliating strongly in the entire sector. pic.twitter.com/xIhej3hizo
— ANI (@ANI) October 20, 2019
இந்த சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில்; பாகிஸ்தான் துருப்புக்கள் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்களைத் தொடங்கின, மறுநாள் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது வருவதாக தெரிவித்துள்ளார்.