அமித் ஷாவின் ஆதரவு தேவையில்லை; சிவசேனாவை சேர்ந்தவர தான் முதல்வர்: உத்தவ் தாக்கரே

பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசிய உத்தவ் தாக்கரே, தனது கட்சிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரின் ஆசீர்வாதம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 8, 2019, 09:29 PM IST
அமித் ஷாவின் ஆதரவு தேவையில்லை; சிவசேனாவை சேர்ந்தவர தான் முதல்வர்: உத்தவ் தாக்கரே title=

மும்பை: மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தின் அரசியல் (Political) பரபரப்புக்கு இடையே, இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சிவசேனா (Shiv Sena)தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray), "பாரதீய ஜனதா (Bharatiya Janata Party) மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசிய அவர், தனது கட்சிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) ஆகியோரின் ஆசீர்வாதம் தேவையில்லை என்று கூறினார். மேலும் நாங்கள் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாஜக, எங்கள் கட்சிக்கு நற்சான்றிதழ் தரத் தேவையில்லை என்றும் ஆவேசமாகக் கூறினார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னவிஸ் பதவி விலகிய பிறகு, செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார். அப்பொழுது அவர், எனது கட்சிக்கு எதிராக ஃபட்னாவிஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததில் வருத்தமாக இருப்பதாக சிவசேனா தலைவர் கூறினார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா குறித்து சிவசேனா ஒருபோதும் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வில்லை.

சிறிது நேரத்திற்கு முன்பு முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் பத்திரிகையாளர் சந்திப்பைக் கேட்டேன். அதில் அவர் தனது சாதனைகளை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பட்டயலிட்டார். அந்த சாதனைகளை அவர் தனியாக மட்டும் செய்யவில்லை. நாங்கள் (சிவசேனா + பாஜக) ஒன்றாக இணைந்து செய்தோம். இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டது. 

2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது அமித் ஷா மற்றும் ஃபட்னாவிஸ் தான் என்னிடம் வந்தார்கள். அவர்களை பார்க்க நான் டெல்லிக்குச் செல்லவில்லை. அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்ட போது, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என விவாதம் தொடங்கியது. ஆனால் துணை முதலமைச்சர் பதவியை நங்கள் ஏற்க மாட்டோம் என நான் சொன்னேன். 

அவர் மேலும் கூறுகையில், "மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருப்பார் என்று பாலா சாஹேப் பால்தாக்கரேவிடம் உறுதியளித்துள்ளேன். சிவசேனாவை சேர்ந்தவரை முதல்வராக ஆக்குவதற்கு ஃபட்னாவிஸ் மற்றும் அமித் ஷா ஆகியோரின் ஆசீர்வாதம் எனக்குத் தேவையில்லை. அவர்களிடம் இருந்து உண்மை மற்றும் பொய் குறித்து சான்றிதழ் எனக்குத் தேவையில்லை எனக் கூறினார்.

Trending News