மகாராஷ்டிராவின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே..!

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை என சோனியா காந்தி, ராகுல் காந்தி கடுதம்!!

Last Updated : Nov 28, 2019, 07:42 PM IST
மகாராஷ்டிராவின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே..! title=

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். மும்பை தாதர் சிவாஜி பூங்கா மைதானத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். 

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து 'மகா விகாஸ் அஹாதி' எனப்படும் மஹாராஷ்டிரா மேம்பாட்டு முன்னணியை அமைத்தன. இந்த கூட்டணி தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டணி, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடிதத்தை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழங்கினார். இதையடுத்து ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, இன்று மாலை 6.40 மணிக்கு மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில், மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உத்தவ் தாக்கரேவுடன் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அஜித்பவாருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அமைச்சர்களின் விவரம்: ஏக்தநாத் ஷிண்டே (சிவசேனா), சுபாஷ் தேசாய் (சிவசேனா), ஜெயந்த் ராஜாராம் பாட்டீல் (NCP), சாகன் சந்திரகாந்த் புஜ்பால் (NCP), பாலாசாகேப் திராட் (காங்.,), நிதின் ராவத் (காங்.,). 

இந்த விழாவில்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, திமுக தலைவர் ஸ்டாலின், மஹா., முன்னாள் முதல்வர் பட்னவிஸ், அஜித்பவார், சகஜ்புஜ்பால், பிரபுல் படேல், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானி, காங்., தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், மகாராஷ்ட்ரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.  

 

Trending News