பாகிஸ்தானில் உள்ள தாவூத் 6 முகவரியை உறுதி செய்தது ஐ.நா.

Last Updated : Aug 23, 2016, 06:42 PM IST
பாகிஸ்தானில் உள்ள தாவூத் 6 முகவரியை உறுதி செய்தது ஐ.நா. title=

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 9 முகவரிகளில் 6 முகவரிகளை ஐ.நா., உறுதி செய்துள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். இந்தியா பலமுறை ஆதாரத்துடன் கூறியது. ஆனால், பாகிஸ்தான் வழக்கம் போல், ஒவ்வொரு முறையும் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வருகிறது.

இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் அடிக்கடி வந்து செல்லும் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களின் முகவரிகள் இந்திய அரசு சார்பில் ஐ.நா., குழுவிடம் வழங்கப்பட்டது. இந்த முகவரிகளில் 3 முகவரிகள் தவறானவை என தெரியவந்துள்ளது. அவை அந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

அல் கொய்தா தடைக்கான ஐ.நா., குழு, நீக்கிய அந்த முகவரியில் ஒன்று, ஐ.நா.,வுக்கான பாக்ஸ்தான் தூதரின் முகவரி என தெரியவந்துள்ளது. ஆனால், இந்தியா வழங்கிய மற்ற 6 முகவரிகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனை ஐ.நா., ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதை உறுதி செய்யும் வகையில், அவன் அடிக்கடி வந்து செல்லும் முகவரிகளை ஆதாரத்துடன் இந்தியா சார்பில் ஐ.நா.,விடம் அளிக்கப்பட்டது. 

பாக்ஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி வீடருகே, தாவூத் வந்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தாவூத் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வருவது முக்கியமானது.

Trending News