மோடியின் ஆட்சியின் கீழ், சர்வாதிகாரம் என்பது தொழிலாகிவிட்டது: ராகுல்காந்தி தாக்கு...

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2018, 01:15 PM IST
மோடியின் ஆட்சியின் கீழ், சர்வாதிகாரம் என்பது தொழிலாகிவிட்டது: ராகுல்காந்தி தாக்கு... title=

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு பல உத்திகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், பாஜக குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது காங்கிரஸ் தலைவர் ஆந்திரா சென்றுள்ளார். அப்போது மக்களிடையே பேசிய ராகுல்காந்தி, அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு நான் பிரதமரானால், பதவியேற்ற உடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோப்பில் தான் முதல் கையெழுத்து இடுவேன். சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது மத்திய அரசின் பொறுப்பு என்றும், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளேன். சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்து பா.ஜ.க மக்களை ஏமாற்றி வருகிறது. என்றும் குற்றம் சாடினார். 

இதை தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ராமன் சிங்கின் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் அமல் அகர்வாலை கண்டித்து, காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தை மக்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

Trending News