UP Assembly Election: சமாஜ்வாடி கட்சியுடன் - ராஷ்டிரிய லோக் தளம் கட்சி கூட்டணி உறுதி

UP Assembly Election 2022: சூடு பிடிக்கும் அரசியல் களம்! சமாஜ்வாடி கட்சியுடன் - ராஷ்டிரிய லோக் தளம் கட்சி கூட்டணி உறுதியானது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 06:00 PM IST
UP Assembly Election: சமாஜ்வாடி கட்சியுடன் - ராஷ்டிரிய லோக் தளம் கட்சி கூட்டணி உறுதி title=

UP Assembly Election News: உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் வர உள்ளதால், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவாரத்தை தொடங்கியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) கூட்டணி குறித்து ஆலோசிக்க சவுத்ரி ஜெயந்த் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். அகிலேஷ் யாதவ் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், கூட்டணி தொடர்பாக பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது. 

அதே நேரத்தில், சவுத்ரி ஜெயந்த் சிங், அகிலேஷ் யாதவ் உடனான புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த படத்தை பகிர்ந்த அகிலேஷ் யாதவ் "ஸ்ரீ ஜெயந்த் சவுத்ரி ஜியுடன் ஒரு மாற்றத்தை நோக்கி" எனப் பதிவிட்டுள்ளார்.

 

இரண்டு தலைவர்களும் லக்னோவில் சந்தித்த பிறகு, ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் சிங் சவுத்ரி, சரியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்று கூறினார். அகிலேஷ் யாதவ் உடனான சீட் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் கூறிய அவர், பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை எங்களுக்கு இல்லை என்று கடுமையாக மறுத்தார். மேலும் பாஜகவுடன் செல்வோம் என்ற பேச்சக்கே இடம் இல்லை என்று அவர் கூறினார்.

ALSO READ | உ.பி. சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் - அதிர்ச்சி அளித்த அகிலேஷ் யாதவ்

இந்த மாத இறுதிக்குள் ஒரு முடிவை எதிர்பார்க்கலாம் என்று RLD தலைவர் முன்பு கூறியிருந்தார். "இந்த மாத இறுதிக்குள், நாங்கள் (ஆர்எல்டி மற்றும் சமாஜ்வாடி கட்சி) முடிவெடுப்போம், ஒன்றாக வருவோம்" என்று ஆர்எல்டி தலைவர் சமீபத்தில் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு கட்சிகளும் 2019 மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் மாநிலத் தேர்தல்களுக்கு இடையேயான கூட்டணி, முக்கியமான மேற்கு உ.பி. தொகுதிகளில் முஸ்லிம் மற்றும் ஜாட் இனத்தினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அந்த வாக்குகளை ஒருங்கிணைக்க இந்த கூட்டணி உதவும் எனக் கூறப்படுகிறது. 2013 இல் முசாபர்நகரில் நடந்த வகுப்புவாத வன்முறைக்குப் பிறகு இரு சமூகங்களுக்கிடையிலான உறவுகள் சீர்குலைந்தன. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, மேற்கு உ.பி.-யில் முன்னிலை பெற உதவியது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது அப்பகுதியில் நீடித்த விவசாயிகளின் போராட்டம் இரு சமூகங்களையும் மீண்டும் ஒன்றிணைத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அகிலேஷ் யாதவ் மற்றும் ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் கூட்டணி அமைக்க விரும்புகிறார்கள். சமாஜவாதி கட்சி 30 முதல் 50 இடங்கள் வரை ஆர்எல்டிக்கு விட்டுக்கொடுக்கும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் முன்பு தெரிவித்துள்ளன.

உ.பி.யின் 403 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கு உ.பி.யில் 100 இடங்கள் உள்ளன. 2017 தேர்தலில், பாஜக 100 இடங்களில் 76 இடங்களை வென்றது.

ALSO READ | உ.பி. தேர்தலில் பெண்களுக்கு 40% இடம் கொடுக்கப்படும்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News