உத்தரப்பிரதேசத்தில் தில்லுமுல்லு! அரசு நிதியுதவிக்காக சகோதரியை திருமணம் செய்த நபர்

உத்தரப்பிரதேசத்தில் அரசின் நிதியுதவியைப் பெறுவதற்காக சொந்த சகோதரியை, ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 20, 2021, 05:24 PM IST
உத்தரப்பிரதேசத்தில் தில்லுமுல்லு! அரசு நிதியுதவிக்காக சகோதரியை திருமணம் செய்த நபர் title=

ஏழை, எளிய குடும்பங்களில் திருமணச் செலவை ஏற்கும் நோக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திருமண உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அரசின் திருமண உதவித்தொகையை பெறுவதற்காக ஒருவர் செய்த தில்லுமுல்லு கிராம மக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ALSO READ | ‘பழிக்கு பழி;’: நாய்கள் மீது போர் தொடுத்துள்ள குரங்குகள்; சுமார் 250 நாய்கள் பலி

பெரோசாபாத் மாவட்டத்தில் உள்ள துந்தலா பகுதியில் கடந்த மாதம் 11 ஆம் தேதி சமூகநலத்துறை சார்பில் முதலமைச்சரின் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், பரிசுப் பொருட்களுக்கும் கொடுக்கப்பட்டது. 

அப்போது, உதவித்தொகை பெற்றவர்களின் விவரங்களை சரிபார்க்கும்போது அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. திருமணம் செய்து கொண்ட 51 ஏழை ஜோடிகளில் ஒரு தம்பதி சகோதர - சகோதரி என தெரியவந்தது. அரசின் திருமண உதவித் தொகையை பெறுவதற்காக இந்த தில்லு முல்லு வேலையை அவர்கள் அரங்கேற்றியது கிராம மக்கள் மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அரசு அதிகாரிகளை ஏமாற்றிய அவர்களை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில், ஆவணங்கள் உறுதி செய்யப்பட்டு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

ALSO READ | வைரலாகும் மிரண்டா பானி பூரி! டேஸ்ட் பண்றிங்களா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News