உ.பி.,ல் கடந்த சில நாட்களாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் உ.பி.,யில் மட்டும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் 161 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளியல் விபரம் தெரிவிக்கிறது.
ராஜ்யசபாவில் இன்று இந்த பிரச்னையை எழுப்பின. உபியில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவை துவங்கியதில் இருந்தே அமளி தொடர்ந்தது. இதனால் இது தொடர்பாக விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார். தற்போது இது தொடர்பான விவாதம் ராஜ்யசபாவில் நடந்து வருகிறது.
இதில், அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் விவகாரத்தில் மத்திய அரசு வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அமைச்சர் நக்வி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசியல் வேண்டாம் எனவும், உறுப்பினர்கள் விரும்பினால், இது தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயார் எனவும் கூறினார்