பாகிஸ்தானின் தூண்டுதலால் தான் காஷ்மீரில் வன்முறை நடக்கிறது: ராகுல்!

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு விவகாரம், அங்கு நடக்கும் வன்முறைக்கு பாகிஸ்தான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்!!

Last Updated : Aug 28, 2019, 12:28 PM IST
பாகிஸ்தானின் தூண்டுதலால் தான் காஷ்மீரில் வன்முறை நடக்கிறது: ராகுல்! title=

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு விவகாரம், அங்கு நடக்கும் வன்முறைக்கு பாகிஸ்தான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பல அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு விவகாரம், அங்கு நடக்கும் வன்முறைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

கடந்த வாரம் ராகுல் காந்தி காஷ்மீர் மக்களை சந்திக்க முயன்ற முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து  ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; நான் இப்போது இருக்கும் அரசுடன் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறேன். ஆனால், ஒரு விஷயத்தை நான் இப்போது தெளிவாக சொல்லிவிடுகிறேன். காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு பிரச்சனை. இந்த பிரச்சனையில் பாகிஸ்தான் தலையிடுவதற்கோ வேறு வெளிநாடுகள் தலையிடுவதற்கோ கொஞ்சமும் இடமில்லை. 

ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடக்கிறது. இந்த வன்முறை பாகிஸ்தான் மூலம் தூண்டப்பட்டு அவர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே தீவிரவாதத்தை ஆதரிக்கும் மிக முக்கியமான நாடு பாகிஸ்தான் தான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில்  செய்துள்ளார்.

இவ்வளவு நாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீர் பிரச்சனையில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். காஷ்மீரில் அமைதி திரும்பாமல் இருக்க பாஜக அரசுதான் காரணம் என்று கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக காஷ்மீரில் கலவரம் ஏற்பட பாகிஸ்தான்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த திடீர் நிலைப்பாடு பாஜகவினரை குஷிப்படுத்தி இருந்தாலும் அரசுக்கு சாதகமாக அவர் பேசியது BJP இடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News