அடுத்த கர்நாடகா முதல்வர் யார்? பட்டியலில் முன்னணியில் இருப்பவர்களின் விவரம்

Karnataka News: கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக யார் வருவார்கள் என்பது தான் பெரும் விவாதமாக உள்ளது. அதில் சில பெயர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 27, 2021, 05:24 PM IST
  • 2 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் பி.எஸ்.எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக யார் வருவார்கள் என்பது தான் பெரும் விவாதமாக உள்ளது.
  • லிங்காயத் ஆதரவு அதிகமாக பாஜகவுக்கு இருக்கிறது.
அடுத்த கர்நாடகா முதல்வர் யார்? பட்டியலில் முன்னணியில் இருப்பவர்களின் விவரம்

Karnataka News: கர்நாடக முதலமைச்சராக இருந்த தனது இரண்டு ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் பி. எஸ். எடியூரப்பா (B. S. Yediyurappa) நேற்று (ஜூலை 26) ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது அதிர்ச்சியாக இருந்தாலும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக யார் வருவார்கள் என்பது தான் பெரும் விவாதமாக உள்ளது. அதில் சில பெயர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக ஆறு பேரின் பெயர் பட்டியலில் இருப்பதாகவும், அதில் அரவிந்த் பெல்லட் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

கர்நாடகா மாநிலத்தை பொறுத்த வரை லிங்காயத் ஆதரவு அதிகமாக பாஜகவுக்கு இருக்கிறது. அதேநேரத்தில் கர்நாடகாவில் வாக்கு வங்கியை வலுவாக்க மற்ற சமூகங்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போதைய பட்டியலில் லிங்காயத், வோக்கலிகா மற்றும் பிராமண சமூகங்களை சேர்ந்தவர்கள் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. 

முருகேஷ் நிரானி - கர்நாடகா சுரங்க மற்றும் புவியியல் துறை அமைச்சர்:
முருகேஷ் நிரானி (Murugesh Nirani) கர்நாடக முதல்வர் பதவிக்கு முன்னணி போட்டியாளராக உள்ளார். ஏனெனில் அவர் லிங்காயத் சமூகத்தில் மிகப்பெரிய பஞ்சாம்சாலி பிரிவைச் சேர்ந்தவர். சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை அமைச்சராக உள்ளார்.

அவர் பில்கி தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ. தேர்வாகியுள்ளார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நெருக்கமாக இருப்பதாக அறியப்படுகிறது, 

ALSO READ | மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சருக்கு சட்டப்படி பதிலடி தந்த அமைச்சர் துரைமுருகன்

அரவிந்த் பெல்லட் - கர்நாடக எம்.எல்.ஏ.
மூத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர் சந்திரகாந்த் பெல்லாட்டின் மகனான இவர், தார்வாட்டில் உள்ள எஸ்.டி.எம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டமும், பிரான்சில் ஐ.என்.எஸ்.இ.டி-யில் வணிக நிர்வாகத்தில் பி.ஜி.டி.எம். பட்டம் பெற்றவர்.

முருகேஷ் நிராணியைப் போலவே, ஐவரும் பஞ்சமசலி லிங்காயத் பிரிவை சேர்ந்தவர். 51 வயதான அரவிந்த் பெல்லாட் (Aravind Bellad), ஹூப்ளி-தார்வாட்டில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டு உள்ளர்.

பசவராஜ் போமாய் - கர்நாடகா உள்துறை அமைச்சர்:
61 வயதான பசவராஜ் போமாய் (Basavaraj Bommai), ஜனதா தளத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ல் பாஜகவில் சேருவதற்கு முன்பு எச்.டி.தேவேகவுடா, ராமகிருஷ்ணா ஹெக்டே உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் பணியாற்றினார்.

ALSO READ | காவிரி தான் எங்களுக்கு வாழ்வுரிமை; தமிழ்நாட்டிற் முழு உரிமை உள்ளது: முதல்வர்

இவரும் பி.எஸ்.எடியூரப்பாவின் நெருங்கிய உதவியாளர். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் , முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர். போமாயின் மகன் ஆவார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு எடியூரப்பாவுக்கு மாற்றும் இவர் தான் சரியாக இருக்கும் எனவும் கருதப்பட்டார்.

சி.என்.அஸ்வத் நாராயண் - துணை முதல்வர், கர்நாடகா:
கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார். இவர் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். 2008 ஆம் ஆண்டு முதல் மல்லேஸ்வரம் பெங்களூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் அஸ்வத் நாராயண் (C. N. Ashwath Narayan), தற்போதைய அமைச்சரவையில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் மற்றும் ஜே.டி (எஸ்) எம்.எல்.ஏ.க்களை பாஜக பக்கம் இழுப்பதில், இவர் வெற்றிகரமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

சி.டி.ரவி - பாஜக தேசிய பொதுச் செயலாளர்:
சிக்கமகளூரைச் சேர்ந்த இவர், நான்கு முறை எம்.எல்.ஏ.வாக  தேர்ந்தடுக்கப்பட்டு உள்ளார். சி.டி.ரவி (C. T. Ravi) இந்துத்துவா ஹார்ட்லைனர் ஆவார். 54 வயதான இவர் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். எடியூரப்பா அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக பணியாற்றியா இவர்,  பாஜக கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக ஆனார்.

ALSO READ | தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா: தென்பெண்ணை ஆற்றிலும் தமிழ்நாட்டின் உரிமை பறிப்பு!

பிரகலாத ஜோஷி - மத்திய நிலக்கரி, சுரங்க மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர்:
பிரல்ஹாத் ஜோஷி (Pralhad Josh) ஒரு பிராமணர். 58 வயதான இவர், நான்கு முறை எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக அறியப்படுகிறது. 2013 இல், பி.எஸ். எடியூரப்பா பாஜகவை விட்டு வெளியேறி கர்நாடக ஜனதா கட்சியை (Karnataka Janata Party) உருவாக்கிய போது, பாஜகவை சரியாக வழிநடத்தினார். அப்பொழுது கர்நாடக முதல்வர் பதவிக்கு முக்கிய போட்டியாளராக பிரகலாத ஜோஷி இருந்தார். ஜோஷி ஒரு திறமையான நிர்வாகியாக இருந்ததால், அவர் மத்திய அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

More Stories

Trending News