BJP MPs Resign: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர்

BJP MPs Resign: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தன்ர். இதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர், 3 பேர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் அடங்குவார்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 6, 2023, 02:21 PM IST
BJP MPs Resign: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர் title=

Who Won State Assembly Elections BJP MPs Resign: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பிக்கள் 10 பேர் இன்று (டிசம்பர் 06, புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். நேற்று (டிசம்பர் 05, செவ்வாய்க்கிழமை) இரவு ஜே.பி.நட்டா மற்றும் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜினாமா செய்த எம்.பி.,க்கள் விவரம்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ராகேஷ் சிங், உதய் பிரதாப் மற்றும் ரீத்தி பதக் ஆகியோர் ராஜினாமா செய்த எம்.பி.க்கள் ஆவார்கள். 

சத்தீஸ்கர், ராஜஸ்தானை சேர்ந்த ராஜினாமா செய்த எம்.பி.,க்கள் விவரம்

அருண் சாவோ மற்றும் கோமதி சாய் ஆகிய இரண்டு பேர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தியா குமாரி மற்றும் கிரோரி லால் மீனா ஆகியோர் மூன்று பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட 21 எம்.பி.க்களுக்கு பா.ஜ., டிக்கெட் 

நான்கு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் 21 எம்.பி.க்களுக்கு பா.ஜ., டிக்கெட் வழங்கியது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 7 எம்.பி.க்கள் போட்டியிட்டனர். அதே நேரத்தில் சத்தீஸ்கரில் நான்கு எம்.பி.க்களுக்கும், தெலுங்கானாவில் மூன்று எம்.பி.க்களுக்கும் சட்டசபையில் சீட்டு வழங்கப்பட்டது. தற்போது, ​​சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்களை பார்லிமென்ட் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. பாஜக கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய சபாநாயகரை சந்திக்க வந்தனர்.

மேலும் படிக்க - தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியின் பெயரை இறுதி செய்த காங்கிரஸ், டிசம்பர் 7 பதவியேற்பு

சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜக யாருக்கு டிக்கெட் கொடுத்தது?

மத்தியப் பிரதேசம்: நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ஃபக்கன் சிங் குலாஸ்தே, ராகேஷ் சிங், ராவ் உதய் பிரதாப் சிங், ரீத்தி பதக், கணேஷ் சிங் ஆகியோருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

ராஜஸ்தான்: பாபா பாலக்நாத், பகீரத் சவுத்ரி, கிரோரி லால் மீனா, தியா குமாரி, நரேந்திர கிச்சாட், ராஜ்யவர்தன் ரத்தோட், தேவ்ஜி படேல் ஆகியோருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

சத்தீஸ்கர்: சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எம்.பி.க்கள் விஜய் பாகேல், கோமதி சாய், ரேணுகா சிங், அருண் சாவ் ஆகியோருக்கு சீட்டு வழங்கப்பட்டது.

தெலுங்கானா: பாண்டி சஞ்சய் குமார், தர்மபுரி அரவிந்த், சோயம் பாபு ஆகியோருக்கு சீட்டு வழங்கப்பட்டது.

புதிய முதல்வரின் பதவியேற்பு விழா சோனியா காந்தி

தெலுங்கானாவில் நவம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சோனியா காந்தி பங்கேற்கலாம். தெலுங்கானாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என்று புதன்கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வந்த சோனியாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஒருவேளை ஆம்" என்று பதில் அளித்தார்.

தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டி

ஐந்து மாநிலங்களில், தெலுங்கானாவில் புதிய அரசாங்கம் டிசம்பர் 7 ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. முதல்வர் பதவிக்கு ரேவந்த் ரெட்டியின் பெயரை காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதேசமயம், டிசம்பர் 8 ஆம் தேதி மிசோரமில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) ஆட்சி அமைப்பதில் தாமதம் செய்து வருகிறது.

மேலும் படிக்க - தேர்தல் அரையிறுதி வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா? இதுவரை நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News