குஜராத் எம்.எல்.ஏவாக ஹர்திக் படேல் வாகை சூடுவாரா? முகாம் மாறிய வேட்பாளர்

Hardik Patel In Gujrat Elections: வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பக்கட்டத்தில் பின்னடைவை சந்திக்கும் ஹர்திக் படேல்! வெற்றி திருமகள் முத்தமிடுவாளா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 8, 2022, 09:31 AM IST
  • பாஜகவுக்கு மாறிய ஹர்திக் படேல் வெற்றி பெறுவாரா?
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து மாறி எதிர் கட்சி முகாமுக்கு மாறியவர் ஹர்திக் படேல்
  • வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பக்கட்டத்தில் பின்னடைவை சந்திக்கும் ஹர்திக் படேல்
குஜராத் எம்.எல்.ஏவாக ஹர்திக் படேல் வாகை சூடுவாரா? முகாம் மாறிய வேட்பாளர்

Gujrat Elections: குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அதில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் இருந்துவரும் நிலையில், பாஜக சார்பில் வீரகம் வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் ஹர்திக் படேல், பின்தங்கியிருப்பதாகவே தெரிகிறது. ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியவர். 2015-ஆம் ஆண்டு முதல் 2019 முடிய படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்க போராடியதற்காக பிரபலமானவர். படேல் சமூகத்தினரின் வாக்கு வங்கி அவருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ஹர்திக் படேல் போட்டியிடும் வீரகாமம் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக தாகூர் சமாஜத்தைச் சேர்ந்த 95000 வாக்காளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு, தாகூர் சமூகத்தினரின் வாக்குகள் பகிர்ந்தே  கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எதிரி வேட்பாளர்களின் ஓட்டுகளை பிரிக்க, அரசியல் கட்சிகள் அங்கு நிற்பதாகவும் கூறப்படுகிறது.

வீரம்காம் சட்டமன்றத்தொகுதி: வீரம்காம் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,2,574. இதில் ஆண் வாக்காளர்கள் 1,55,923, பெண் வாக்காளர்கள் 1,46,620 ஆகவும் உள்ளனர். சாதிவாரியான வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், தாக்கூர் வாக்காளர்களின் எண்ணிக்கை 95000-க்கும் அதிகமாகவும், படேல் 38000-க்கும் அதிகமாகவும், தலித் 28000, கோலி படேல் 21000, பல்வி தாக்கூர் 21000, முஸ்லீம் 23000, ராஜ்புத் சமாஜ் 5000, பரவத் சமாஜ், 5000-க்கும் அதிகமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரபாரி சமாஜ் 5000, பிராமண சமாஜ் 4000, பிரஜாபதி. 4,500, டல்வாடி 5000, ராவல் 5000, தேவிபூஜக் 5000, பஜானியா 3500, சாது 2500, ஜெயின் 3000, தலா 3000, தலாஜி 3000,  ராஜபுத்திர சமூகம் உள்ளிட்ட பிற சமூகத்தினரின் வாக்குகளும் இந்தத் தேர்தலில் முடிவை தீர்மானிக்கும்.  

மேலும் படிக்க | குஜராத்தில் காங்கிரஸ் 27 ஆண்டுகால வனவாசத்தை முடிக்குமா? இல்லை அஞ்ஞாத வாசமா?

2022 சட்ட மன்றத் தேர்தல்
இதுவரை குஜராத் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் மோதலில், ஆம் ஆத்மி கட்சியும் இணைந்ததால், தற்போது 2022 தேர்தல், மும்முனைப் போருக்கு வழிவகுத்தது. இதில் அகமதாபாத் மாவட்டம் விரம்காம் தொகுதியில் காங்கிரசை விட்டு வெளியேறி படிதார் இயக்கத்தின் முக்கிய முகமாக மாறிய ஹர்திக் படேலுக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது என்பதால் அந்தத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அனைவரும் கூர்ந்து நோக்குகின்றனர். மறுபுறம், காங்கிரஸ் தனது தற்போதைய எம்.எல்.ஏவான லகா பர்வாட்டை வீரகாமத்தில் மீண்டும் களத்தில் இறக்கியுள்ளது. வீர்கம் தொகுதியில் குன்வர்ஜி தாகூரை வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி நியமித்துள்ளது. 

2017 சட்ட மன்றத் தேர்தல்
2017 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த தேஜ்ஸ்ரீபென் படேல், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விராம்கம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இருப்பினும், லகா பர்வாட் மீண்டும் வெற்றி பெற்றார். 2017ல் காங்கிரஸ் வேட்பாளர் லகா பர்வாட் 76,178 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் தேஜாஸ்ரீபென் படேல் 69,630 வாக்குகள் பெற்றார். இதனால், இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 6,548 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2012 சட்ட மன்றத் தேர்தல்
2012 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் தேஜ்ஸ்ரீபென் படேல் விராம்கம் தொகுதியில் 84,930 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் பிரக்ஜி படேல் 67,947 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால், இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 16,983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது மொத்த வாக்கு சதவீதம் 67.18%.

மேலும் படிக்க | குஜராத் தேர்தல் முடிவுகள் ஆட்சியை தக்க வைத்து சரித்திரம் படைக்குமா பாஜக?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News