கஸ்டமர் கேருக்கு செய்த போனால் ரூ.16 லட்சத்தை பறிகொடுத்த பெண்!

புகார் தெரிவிப்பதற்காக வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்புகொண்டு பேசிய பெண் ரூ.16 லட்சத்தை இழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 05:47 PM IST
  • வங்கிக்கணக்கில் பிரச்சனைகளை தீர்க்க AnyDeskஐ பதிவிறக்கம் செய்யுங்கள் கூறியுள்ளார்.
  • வங்கி கணக்கிலிருந்து ரூ.13.15 லட்சம் கடனுக்கு விண்ணப்பித்து, பணத்தை பல்வேறு தளங்களுக்கு பரிவர்த்தனை செய்துவிட்டார்.
கஸ்டமர் கேருக்கு செய்த போனால் ரூ.16 லட்சத்தை பறிகொடுத்த பெண்!  title=

குருகிராம்:  ஹரியானா மாநிலம், குருகிராம்  நகரத்தை சேர்ந்த பெண் பூர்ணிமா ஆனந்த்.  அவரது வங்கிக் கணக்கில் ஏற்பட்ட சில குளறுபடிகளை சரிசெய்வது குறித்து ஒரு முன்னணி தனியார் வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு பேசி தனது புகாரை தெரிவித்துள்ளார்.  அதனையடுத்து கடந்த நவம்பர் 12ம் தேதியன்று பூர்ணிமாவிற்கு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர் தன் பெயர் ராகுல் சர்மா என்றும், தன்னை வங்கி ஊழியர் என்றும் அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.   பின்னர் உங்கள் வங்கிக்கணக்கில் பிரச்சனைகளை தீர்க்க AnyDeskஐ பதிவிறக்கம் செய்யுங்கள் என்று அந்த நபர் பூர்ணிமாவிடம் கூறியுள்ளார். 

ALSO READ | ஆயுளைக் கூட்டும் ’சிரிப்பு மந்திரம்’ - ஜாலியாக பண்ணுங்க..!

அந்த நபர் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவரது வங்கி கணக்கிலிருந்து  ரூ.13.15 லட்சம் கடனுக்கு விண்ணப்பித்து அந்த பணத்தை பல்வேறு ஆன்லைன் தளங்களுக்கு பரிவர்த்தனை செய்துவிட்டார்.  மீண்டும் நவம்பர் 25ம் தேதியன்று அவருக்கு மற்றொரு அழைப்பு வந்துள்ளது, அந்த அழைப்பில் பேசியவரும் தன் பெயர் சுஜித் என்றும், தன்னை ஒரு வாங்கி ஊழியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.  அவரும் பூர்ணிமாவிடம் AnyDeskஐ பதிவிறக்கம் செய்து உங்கள் வங்கி கணக்கில் உள்நுழையுங்கள் என்று கூறினார்.  அவரும் அதனை நம்பி உள்நுழைந்தவுடன் அவரது கணக்கில் இருந்து சுமார் ரூ.3 லட்சத்தை அந்த மோசடி கும்பல் பறித்துகொண்டது.  அதன்பின்னர் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதை அறிந்த பூர்ணிமா இதுகுறித்து காவல் துறையில் புகாரளித்தார். 

cscs

மேலும் அவர் இதுபோன்ற பரிவர்த்தனைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதுமட்டுமல்லாது வங்கியிலிருந்து எனக்கு எவ்வித அறிவிப்பும் வரவில்லை என்று போலீசாரிடம் கூறினார்.  தகவலின் அடிப்படைப்படையில் சைபர் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 420 (ஏமாற்றுதல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 டி ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ALSO READ | பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வருவார் என்று எதிர்பார்க்கும் பஞ்சாப் முதலமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News