Karnataka Elections 2023: தேர்தல் நிலவரம் என்ன? கருத்து கணிப்பில் இந்த கட்சி தான் முன்னிலை!

Karnataka Elections 2023: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர், இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.

Written by - RK Spark | Last Updated : May 10, 2023, 04:45 PM IST
  • கர்நாடக தேர்தல் முடிவுகள் மே 13-ம் தேதி (சனிக்கிழமை) வெளியாகிறது.
  • தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  • மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
Karnataka Elections 2023: தேர்தல் நிலவரம் என்ன? கருத்து கணிப்பில் இந்த கட்சி தான் முன்னிலை! title=

Karnataka Elections 2023: கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  அதன் பிறகு கருத்துக் கணிப்பு வெளியிடப்படும், இந்த தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மாநிலத்தில் 2வது முறையாக ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, மேலும் கண்டிப்பாக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.  மறுபுறம் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம் செய்து வந்தது.  கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த திங்கள்கிழமை மாலையுடன் முடிவடைந்து விட்டது.  பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெற்கு கோட்டையில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகள் மே 13-ம் தேதி (சனிக்கிழமை) வெளியாகிறது.

மேலும் படிக்க | Karnataka Election 2023 Live Voting: கர்நாடகாவில் மும்முனைப் போட்டி... வாக்குப்பதிவு தொடங்கியது!

ஜீ நியூஸ் மற்றும் மேட்ரைஸ் கருத்துக் கணிப்பில் பாஜக 103 முதல் 115 இடங்களை வெல்லும் என்றும் காங்கிரஸ் 79 முதல் 91 இடங்களையும், ஜனதா தளம் 26 முதல் 36 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.  நாராயணா என்ற அரசியல் ஆய்வாளர் கூறுகையில், மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவே வாக்காளர்கள் உள்ளனர்.  மக்கள் பாஜக மீது கோவமாக இருப்பதால், அது வாக்குப்பதிவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி பாஜகவினரை கவலையில் ஆழ்த்திவிடும்.  மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்.  மற்றொரு நிபுணரான சந்தீப் சாஸ்திரியும் காங்கிரஸ் கட்சிக்கே இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கும் என்று கருதுகின்றனர்.  வருணா, கனகபுரா, ஷிக்கான், ஹூப்ளி-தர்வாட், சன்னபட்னா, ஷிகாரிபுரா, சித்தாப்பூர், ராமநகரா மற்றும் சிக்மகளூர் ஆகிய தொகுதிகள் இந்த தேர்தலில் முக்கியமான தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.  

1) கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஷிக்கான் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.  

2) காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா 2008-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.  

3) பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா தனது மகனை ஷிகாரிபூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.  

4) கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.  

5) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சித்தப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 

6) சன்னப்பட்டணா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். 

7) கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்டி தேவகவுடாவின் பேரன் நிகில் குமாரசாமி 2019 தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் ராமநகரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  பெங்களூரு, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர், இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.  கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஷிஜாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா வாக்களித்த பின் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், 'எல்லா மக்களையும் கூடிய விரைவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நான் 100% உறுதியாக நம்புகிறேன்.  75-80% க்கும் அதிகமானோர் பாஜகவை ஆதரிப்பார்கள், நாங்கள் 130-135 இடங்களை வெல்வோம்' என்று உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Karnataka Voting Day: நம்பிக்கையுடன் முன்னேறும் காங்கிரஸ்! பதற்றத்தில் பாஜக

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News