ஐபிஎல் 2018 முதல் ஆட்டம்: ரீ-என்ட்ரி சிஎஸ்கே & நடப்பு சாம்பியன் எம்ஐ மோதல்

ஐபிஎல் 11_வது சீசன் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 7, 2018, 09:50 AM IST
ஐபிஎல் 2018 முதல் ஆட்டம்: ரீ-என்ட்ரி சிஎஸ்கே & நடப்பு சாம்பியன் எம்ஐ மோதல் title=

கடந்த 10 வருடமாக நடந்து வரும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் இன்று கோலாகலமாக மும்பை வான்கடே ஸ்டேடியம் தொடங்குகிறது. பலத்த வரவேற்பை பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின், இந்த ஆண்டுக்கான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதுவரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் 22 முறை மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் 12 முறையும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு சாம்பினான மும்பை இந்தியன்ஸ் அணி இருவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று களம் இறங்குவார்கள் என எதிர்பார்ப்படுகிறது. இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ஐ.பி.எல். சீசனில் முதல் முறையாக டி.ஆா்.எஸ். முறை பின்பற்றப்படுகிறது. ஐ.பி.எல் 11_வது சீசனில் முதல் போட்டியும், இறுதி போட்டியும் மும்பையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். 11_வது சீசனில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.26 கோடியும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும் வழங்கப்படும்.

ஐ.பி.எல் 11_வது சீசனில் மொத்தம் எட்டு அணிகளான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடுகின்றன.  

Trending News