IPL 2018: சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை விவரம் உள்ளே!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

Last Updated : Mar 30, 2018, 09:40 AM IST
IPL 2018:  சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை விவரம் உள்ளே! title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அதுவும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 10-ந் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இந்த நிலையில் சென்னை அணி தனது ஊரில் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை விவரம் வெளியாகி உள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.1,300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆன்-லைனிலும், ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படும். தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படுகிறது.

Trending News