தனது இரண்டாவது அரை சதத்தினை பதிவு செய்தார் சுனில் நரேன்!

IPL 2018 தொடரில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேன் தனது இரண்டாவது அரை சதத்தினை பதிவு செய்துள்ளார்!

Last Updated : May 12, 2018, 05:21 PM IST
தனது இரண்டாவது அரை சதத்தினை பதிவு செய்தார் சுனில் நரேன்! title=

IPL 2018 தொடரில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேன் தனது இரண்டாவது அரை சதத்தினை பதிவு செய்துள்ளார்!

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

இத்தொடரின் 44-வது போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இந்தூர் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில்  டாஸ் வென்ற டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிரிஸ் லெயன் மற்றும் சுனில் நரேன் இருவரும் அதிரடியான துவக்கத்தினை வெளிப்படுத்தினர். 17 பந்துகளில் 27 ரன்கள் குவித்து லெயன் வெளியேறிய போதிலும் மற்றொரு வீரரான சுனில் நரேன் அதிரடியாக விளையாடி வெறும் 36 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இத்தொடரில் இது இவருடைய இரண்டாவது அரை சதமாகும்.

ஆட்டத்தின் பாதியில் இவரது விக்கெட் விழும் நிலையில் தப்பிய இவர் தனது அதிரடியை குறைக்கவில்லை. பின்னர் ஆண்ட்ரிவ் டை வீசிய பந்தில் ராகுலிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். எனினும் இவரது ரன் அணியின் வெற்றிக்கான நிகழ்தகவினை அதிகரித்து உள்ளது.

Trending News