ஒரு வயது குழந்தைக்கு அடித்த ஜாக்பார்ட்... லாட்டரியின் மதிப்பு 7 கோடி..!

கேரளாவைச் சேர்ந்த 1 வயது ஆண் குழந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1 மில்லியன் டாலர் லாட்டரியை வென்ருள்ளது!!

Last Updated : Feb 6, 2020, 01:53 PM IST
ஒரு வயது குழந்தைக்கு அடித்த ஜாக்பார்ட்... லாட்டரியின் மதிப்பு 7 கோடி..!  title=

கேரளாவைச் சேர்ந்த 1 வயது ஆண் குழந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1 மில்லியன் டாலர் லாட்டரியை வென்ருள்ளது!!

கேரளா: கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 1 வயதுக்கும் குறைவான மகனின் பெயரில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 7 கோடியே 12 லட்சம் ரூபாய் (USD 1 million) பரிசுத் தொகை விழுந்துள்ளது. ஐக்கிய அரசு அமீரகம் நாட்டில் ரபேல் டிரா எனப்படும் மாதாந்திர லாட்டரி சீட்டில் கேரளாவை சேர்ந்த ரமீஸ் ரஹ்மான் (Ramees Rahman ) என்பவர் பங்கேற்று தனது மகன் முகமது சலாவின் பெயரில் லாட்டரி வாங்கியுள்ளார். 

இதற்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டபோது, அதில் ரஹ்மான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 7 கோடியே 12 லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில்... "இந்த சிறந்த செய்தியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்த அற்புதமான விளம்பரத்திற்காக துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி கூறுகிறேன். எனது மகனின் எதிர்காலம் இப்போது நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது" என்று ரமீஸ் அந்த அறிக்கையில் மேற்கோளிட்டுள்ளார்.

31 வயதான ரமீஸ் அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிகிறார். அவரது மகன் முகமது சலா பிப்ரவரி 13 ஆம் தேதி ஒரு வயதாகிறது என்று வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இத்தகைய அதிர்ஷ்ட டிராவில் பல இந்தியர்கள் அதிர்ஷ்டம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு, துபாயில் வேலை கிடைக்காததால் வீடு திரும்பிய ஒரு இந்திய விவசாயி, ரேஃபிள் டிராவில் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வென்றார். அவர் தனது மனைவியிடம் கடன் வாங்கிய பணத்துடன் டிக்கெட் வாங்கியிருந்தார். 

 

Trending News