"காட்டு வாழ்க்கை வாழ வேண்டும்" விபரீத ஆசையால் பறிபோன உயிர்கள்!

காட்டு வாழ்க்கை வாழ நினைத்து சகோதரிகள் மற்றும் சிறுவன் உள்பட மூன்று பேர் இறுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் என்ன நடந்தது முழுமையாக பார்க்கலாம்.  

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - RK Spark | Last Updated : Jul 29, 2023, 05:55 PM IST
  • காட்டுக்குள் சென்ற சதோகரிகள்.
  • உணவின்றி கஷ்டப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
  • கடும் பனி காரணமாகவும் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
"காட்டு வாழ்க்கை வாழ வேண்டும்" விபரீத ஆசையால் பறிபோன உயிர்கள்! title=

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் ஸ்பிர்ங்ஸ் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான ரெபெக்கா வான்ஸ் அவரது சகோதரி கிறிஸ்டின் மற்றும் 13 வயது சிறுவன் என மூன்று பேரும் சேர்ந்து நகர வாழ்க்கையை துறந்து காட்டு வாழ்க்கையை வாழ விரும்பி உள்ளனர். இதற்காக கடந்த வருடம் கோடை காலத்தின் போதே இது பற்றி முடிவு செய்துள்ளனர். பின்னர் மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிகளில் எப்படி வாழ்வது என்பது குறித்து யூடியூப் போன்ற தளங்களில் அவர்கள் வீடியோக்களை பார்த்ததாக சொல்லப்படுகிறது.

இயற்கையோடு இணைந்து காட்டிற்குள் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பிய அவர்கள் ராக்கி மலைத்தொடரில் இருந்து தொலைதூரத் மலை பிரதேசத்திற்கு சென்றனர். பின்னர் சில மாதங்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி குன்னிசன் தேசிய வன பகுதியில் மலை ஏற்ற வீரர்கள் சிலர் மோசமாக சிதைந்து கிடந்த இருவரின் உடல்களை பார்த்ததாக கூறி உள்ளனர். இதனை அடுத்து உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.

forest

மேலும் படிக்க | "தொட்டதற்கு தண்டனை" மனித மலத்தை முகத்தில் பூசி அராஜகம்... போலீஸில் தலித் புகார்!

அந்தப் பகுதியில் ஒரு கூடாரம் இருந்துள்ளது அதன் அருகில் இரண்டு உடல்கள் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மற்றொரு நபரின் உடல் கூடாரத்திற்கு வெளியே சுமார் 9500 அடி உயரத்தில் ஒரு இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி விசாரணை அதிகாரியான மைக்கேல் பேசும்போது அவர்கள் மூவரும் தாங்கள் வாழ விரும்பிய பகுதியில் ஒரு வசிப்பிடத்தை கட்ட முயன்றதாக தெரிகிறது. ஆனால் அதற்குள் குளிர்காலம் வந்து விட்டதால் வீடு கட்டும் முயற்சியை கைவிட்டு கூடாரத்திற்கு உள்ளேயே நேரத்தை செலவிட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் . மேலும் குளிர்காலம் முன்கூட்டியே வந்ததன் காரணமாக அவர்கள் கூடாரத்தில் உயிர் வாழும் நிலையில் இருந்தார்களா என்பதை எண்ணும்போது தனக்கு வியப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது பசி பட்டினி என்றும் சொல்லப்படுகிறது.  

இது பற்றி பேசி உள்ள ரெபேக்காவின் மற்றொரு சகோதரியான ஜாரா நாங்கள் செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் எங்கள் பேச்சை கேட்க அந்த மூவரும் தயாராக இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஸ்பின்ஸ் மாகாணத்தை பொருத்தவரை பொதுவாக ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் கோடை காலமாக இருக்கின்றன, ஆனால் இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்பே பனிக்காலம் தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனை எதிர்பார்க்காத அந்த சகோதரிகள் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்கு நூதன தண்டனை: போக்குவரத்தைச் சீர்செய்ய உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News