7th Pay Commission பம்பர் ஊதிய உயர்வு நிச்சயம்: டி.ஏ உடன் இந்த காரணிகளிலும் ஏற்றம்

அரசாங்கம் விரைவில் ஊழியர்களின் சம்பள உயர்வைப் பற்றிய அறிவிப்பை வெளியிடக்கூடும். ஊழியர்களின் அகவிலைப்படியுடன், அவர்களது வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 12:05 PM IST
  • வீட்டு வாடகை கொடுப்பனவின் அடுத்த திருத்தத்தில், HRA 3 சதவீதம் அதிகரிக்கும்.
  • அகவிலைப்படி உயர்வு 50 சதவீதத்தைத் தாண்டினால் மட்டுமே இது நடக்கும்
  • ஹெச்ஆர்ஏ அதிகரிப்பு மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கு பெரும் நன்மை பயக்கும்.
7th Pay Commission பம்பர் ஊதிய உயர்வு நிச்சயம்: டி.ஏ உடன் இந்த காரணிகளிலும் ஏற்றம் title=

7th Pay Commission Latest Updates: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அரசாங்கம் விரைவில் ஊழியர்களின் சம்பள உயர்வைப் பற்றிய அறிவிப்பை வெளியிடக்கூடும். ஊழியர்களின் அகவிலைப்படியுடன், அவர்களது வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயனடையவுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

வீட்டு வாடகை கொடுப்பனவு 3 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்

தற்போது மத்திய பணியாளர்களுக்கு அவர்களின் வகைகளுக்கு ஏற்ப 9 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 27 சதவீதம் என்ற விகிதத்தில் ஹெச்ஆர்ஏ (HRA) வழங்கப்படுகிறது. HRA 3 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, HRA விகிதங்கள் வகைகளைப் பொறுத்து 10 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 30 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச HRA 10 சதவீதமாக இருக்கும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஹெச்ஆர்ஏ அதிகரிப்பு மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கு பெரும் நன்மை பயக்கும்.

HRA வரம்பில் இந்த மாற்றும்

7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரையின்படி, HRA ஸ்லாப் 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதத்துக்குப் பதிலாக 24 முதல் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த அதிகரிப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என ஆணையம் தெரிவித்திருந்தது. அறிக்கையின்படி, வீட்டு வாடகை கொடுப்பனவின் அடுத்த திருத்தத்தில், HRA 3 சதவீதம் அதிகரிக்கும். HRA தற்போதுள்ள 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படும். இருப்பினும், அகவிலைப்படி உயர்வு 50 சதவீதத்தைத் தாண்டினால் மட்டுமே இது நடக்கும். DoPT இன் அறிக்கையின் படி, அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டினால், வீட்டு வாடகை கொடுப்பனவு 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதமாக மாறும்.

அகவிலைப்படி அதிகரிப்பால் HRA அதிகரிக்கும்

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், அரசு, அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தியது. அகவிலைபப்டி 25 சதவீதத்தை தாண்டியதால், ஹெச்ஆர்ஏவும் அதிகரிக்கப்பட்டது. இப்போது இது தொடர்பாக வரும் செய்திகளின்படி, டிஏ-வை 34 சதவீதம் உயர்த்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்கு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தால், அது 50 சதவீதத்தைத் தாண்டி, இரண்டாவது முறையாக எச்.ஆர்.ஏ., அதிகரிக்க வழி வகுக்கும். 

ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 3% DA-DR 3% உயர்வு

அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரிக்கும்

ஜூலையில் 31 சதவீதமாக இருந்த டிஏவில் இருந்து செப்டம்பர் மாதம் வரை இது 2 சதவீதம் அதிகரித்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இப்போது, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் வரப் போகின்றன. இதில் மேலும் ஒரு சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது அகவிலைப்படி 34 சதவீதத்தை எட்டும். 

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ 19,346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ 17,639/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 19,346-17,639 = ரூ. 1,707/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12 = ரூ 20,484

ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு

2022ஆம் ஆண்டின் துவக்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. அவர்கள் பெறும் அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த ஒரு பெரிய முடிவையும் அரசாங்கம் எடுக்கக்கூடும். பணியாளர்கள் பெறும் சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக, மத்திய ஊழியர்களின் சம்பளம் (Salary Hike) இரண்டரை மடங்குக்கு மேல் உயரப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. 

ALSO READ | 7th Pay Commission: இந்த மாதம் கிடைக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி, வரவுள்ளது பம்பர் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News