7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதத்தில் அவர்கள் காத்துக் கொண்டிருந்த நல்ல செய்தி அவர்களுக்கு கிடைக்கும். அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அகவிலைப்படி அதிகரிப்பு
மத்திய அரசாங்கம் (Central Government) அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி நான்கு சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் மொத்த டிஏ 50% -ஐ எட்டும். சமீபத்தில் டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி 5.26 சதவிகிதமாக உள்ளது. தசம புள்ளிகளுக்கு பிறகு வரும் எண்களை புறக்கணித்துவிட்டு பார்த்தால் இந்த முறை மத்திய அரசாங்கம் (Central Government) அகவிலைப்படியை 50% ஆக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
அனைத்து இந்திய CPI-IW தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் (Dearness Allowance) ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் (Dearness Relief) வழங்கப்படுகின்றன. ஆண்டில் இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படுகின்றன.
மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறிக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் சிபிஐ ஐடபிள்யு தரவை வெளியிடுகின்றது. முன்னதாக 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு அக்டோபரில் வந்தது. இந்த முறையும் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அகவிலைப்படி உயர்வால் எத்தனை ஊழியர்கள் பயனடைவார்கள்?
சமீபத்திய தரவுகளின் படி அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் (DA Hike) அதன் நன்மைகள் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 69.76 ஓய்வூதியதாரர்களுக்கும் (Pensioners) கிடைக்கும்.
மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே விதியில் மாற்றம்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது வரும்?
பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படுகிறது. எனினும், இதற்கான துல்லியமான தேதி பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் மார்ச் மாத நடுப்பகுதியில் இந்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி அதிகரித்த பிறகு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
அகவிலைப்படி அதிகரிப்பால் ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் ஊதியம் (Take Home Salary) அதிகமாகும். உதாரணமாக, ஒரு ஊழியரின் மாத அடிப்படை சம்பளம் ரூ. 53,500 என வைத்துக்கொள்வோம். டிஏ 46% ஆக இருந்தால், அவரது டிஏ தொகை ரூ. 24,610 ஆக இருக்கும். டிஏ 50% ஆனால், அவரது டிஏ தொகை ரூ. 26,750 ஆக உயரும். அதாவது அவரது சம்பளம் மாதத்திற்கு ரூ. 2,140 அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Post Office MIS: மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம், மாதா மாதம் அசத்தல் வருமானம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ