விரைவில் DA Hike: ஊழியர்களுக்கு எகிறப்போகும் மாத சம்பளம்.. முழு கணக்கீடு இதோ

7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுவாக ஒரு ஆண்டில் இரண்டு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டிஏ ஹைக் அமல்படுத்தப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2024, 10:24 PM IST
  • நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா?
  • இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரம்?
விரைவில் DA Hike: ஊழியர்களுக்கு எகிறப்போகும் மாத சம்பளம்.. முழு கணக்கீடு இதோ

7th Pay Commission, DA Hike: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் மத்திய பணிகளில் பணிபுரியும் யாரேனும் உள்ளார்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. அவர்களது அகவிலைப்படி 4% அதிகரிக்கவுள்ளது. 2023 ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு மீண்டும் ஒரு அதிகரிப்பு அளிக்கப்பட உள்ளது.

Add Zee News as a Preferred Source

மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுவாக ஒரு ஆண்டில் இரண்டு முறை அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிக்கப்படுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டிஏ ஹைக் (DA Hike) அமல்படுத்தப்படுகின்றன. ஜனவரி மாதத்தின் அகவிலைப்படி அதிகரிப்பிற்கான அறிவிப்பு பொதுவாக மார்ச் மாதத்தில் வருகிறது. ஆகையால் இன்னும் சில நாட்களில் அகவிலைப்படி அதிகரிப்பிற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் அங்கமான தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் CPI-IW தரவை வெளியிடுகிறது.

அகவிலைப்படி கணக்கீட்டிற்கான சூத்திரம் என்ன? (Formula for Calculating Dearness Allowance)

7வது ஊதியக்குழு அகவிலைப்படி% = [{AICPI-IW -இன் கடந்த 12 மாத சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100)  – 261.42}/261.42x100]

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சூத்திரம் ஏழாவது ஊதிய குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் கீழ் ஊதியம் மற்றும் ஓய்வூதியும் பெரும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே விதியில் மாற்றம்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டுமா?

கடந்த 12 மாதங்களில் CPI-IW தரவுகளின் சராசரி 392.83 ஆக உள்ளது. இதற்கான சூத்திரத்தின் படி, டிஏ (DA) அடிப்படை ஊதியத்தில் 50.26 என வருகிறது. தசம புள்ளிகளுக்கு பிறகு வரும் எண்களை புறக்கணித்துவிட்டு பார்த்தால்  இந்த முறை மத்திய அரசாங்கம் (Central Government) அகவிலைப்படியை 50% ஆக உயர்த்தும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி கிடைக்கிறது

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்கள் 46% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். ஜூலை 2023 முதல் இது அமலில் உள்ளது. 2023 அக்டோபர் 18 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த முறையும் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு 2024 ஜனவரி 1 முதல் பொருத்தம்

அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

- அகவிலைப்படி அதிகரிப்பால் ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் ஊதியம் (Take Home Salary) அதிகமாகும். 

- உதாரணமாக, ஒரு ஊழியரின் மாத அடிப்படை சம்பளம் ரூ. 53,500 என வைத்துக்கொள்வோம்.

- டிஏ 46% ஆக் இருந்தால், அவரது டிஏ தொகை ரூ. 24,610 ஆக இருக்கும்.

- டிஏ 50% ஆனால், அவரது டிஏ தொகை ரூ. 26,750 ஆக உயரும்.

- அதாவது அவரது சம்பளம் மாதத்திற்கு ரூ. 2,140 அதிகரிக்கும். 

மேலும் படிக்க | EPFO Pension Rules: கணவனுக்கு பின் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News