7th Pay Commission: அரசு கொடுத்த தீபாவளி பரிசால் அசுர வேகத்தில் ஊதியத்தில் ஏற்றம்

31% அகவிலைப்படியில் ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2021, 06:27 PM IST
  • மத்திய அரசு மீண்டும் ஊழியர்களின் அகவிலைப்படியை 3% அதிகரித்துள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 31% வீதம் டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படும்.
  • தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
7th Pay Commission: அரசு கொடுத்த தீபாவளி பரிசால் அசுர வேகத்தில் ஊதியத்தில் ஏற்றம் title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) ஏற்கனவே 28% கிடைக்கத் தொடங்கியுள்ளது. 

இப்போது மத்திய அரசு மற்றொரு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து 28%-உடன் 3% அதிகரித்து அகவிலைப்படியை 31% ஆக உயர்த்தியுள்ளது. 31% அகவிலைப்படியில் ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சம்பள தரத்திற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும்

மத்திய அரசு மீண்டும் ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) 3% அதிகரித்துள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 31% வீதம் டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படும். மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்ப சம்பள உயர்வைப் பெறுவார்கள்.

அரசு 31% அகவிலைப்படிக்கான அறிவிப்பை அளித்தது

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பரிசாக அவர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் பலனைப் பெறுவார்கள்.

இந்த அறிவிப்பின் பயன் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்

மத்திய அரசின் அறிவிப்பின்படி, அகவிலைப்படி உயர்வின் பயன் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். முன்னதாக ஜூலையில், அரசாங்கம் அகவிலைப்படியை 11 சதவீதம் அதிகரித்து 28 சதவீதம் வரை உயர்த்தியது. அதன் பிறகு தற்போது அகவுலைப்படி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 31 சதவீத டிஏ கிடைக்கும்.

31% அகவிலைப்படியில் கணக்கீடு

இப்போது 3% அகவிலைப்படி அதிகரிப்புடன், மொத்த அகவிலைப்படி 31% ஆக உயரும். 7 வது ஊதியக் குழு (7th Pay Commission) மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசின் லெவல் 1 ஊழியர்களின் ஊதிய வரம்பு குறைந்தபட்சமாக ரூ .18,000 முதல் அதிகபட்சமாக ரூ .56,900 வரை இருக்கும். 

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .5580/மாதம்
3. இதுவரை இருந்த அகவிலைப்படி (28%) - ரூ. 5040/மாதம்
4. உதவித்தொகையில் அதிகரிப்பு - 5580-5040 = ரூ. 540/மாதம்
5. ஒரு ஆண்டுக்கான ஊதிய அதிகரிப்பு - 540X12 = ரூ 6480

அதிக ஊதிய வரம்பில் ஊதியம் மேலும் அதிகரிக்கும்

லெவல்-1 இன் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900-ல் கணக்கீடு இதோ.

31% அகவிலைப்படியில் கணக்கீடு

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .17,639 /மாதம்
3. இதுவரை இருந்த அகவிலைப்படி (28%) - ரூ. 15,932/மாதம்
4. உதவித்தொகையில் அதிகரிப்பு - 17639-15932 = 1,707/மாதம்
5. ஒரு ஆண்டுக்கான ஊதிய அதிகரிப்பு -  1707X12=  ரூ.20,484

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி, இனி இந்த தொகையும் சம்பளத்தில் சேரும்

அகவிலைப்படி 28% ஆக அதிகரிக்கப்படுவதற்கு முன்னர், அதாவது 17% அகவிலைப்படி இருந்த போது ஊழியர்களுக்கு (Central Government Employees) கிடைத்த ஊதியத்துக்கும் தற்போது கிடைக்கப்போகும் ஊதியத்துக்கும் உள்ள வித்தியாசத்துக்கான கணக்கீடு.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .5580/மாதம்
3. முன்பிருந்த அகவிலைப்படி (17%) - ரூ. 3060/மாதம்
4. உதவித்தொகையில் அதிகரிப்பு - 5580-3060 = ரூ. 2520/மாதம்
5. ஒரு ஆண்டுக்கான ஊதிய அதிகரிப்பு - 2520X12= ரூ. 30,240  

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .17,639 /மாதம்
3. இதுவரை இருந்த அகவிலைப்படி (17%) - ரூ.  9673/மாதம்
4. உதவித்தொகையில் அதிகரிப்பு - 17639-9673 = 7,966/மாதம்
5. ஒரு ஆண்டுக்கான ஊதிய அதிகரிப்பு -  7966X12=  ரூ. 95,592

ALSO READ: 7th Pay Commission: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, வருமானமோ வருமானம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News