இந்த ஊழியர்கள்ளுக்கு அடித்தது ஜாக்பாட்: அகவிலைப்படியை 3% அதிகரித்தது அரசு

7th Pay Commission update: மாநில அரசு ஊழியர்களுக்கு, 6,000 கோடி ரூபாய் பலன்களை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில், புதிய ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2022, 03:32 PM IST
  • அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
  • இந்த மாநில அரசு அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது.
  • மத்திய அரசும் மத்திய ஊழியர்களின் அகவிலைபப்டியை மீண்டும் ஒருமுறை உயர்த்தக்கூடும்.
இந்த ஊழியர்கள்ளுக்கு அடித்தது ஜாக்பாட்: அகவிலைப்படியை 3% அதிகரித்தது அரசு title=

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஆண்டில் மாநில அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியை (டிஏ) அறிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேச மாநில உருவாக்க தின விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஊழியர்களுக்கு அருமையான பரிசு

இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கூறுகையில், 'மாநில அரசு ஊழியர்களுக்கு, 2.25 லட்சம் ஊழியர்களுக்கு, 6,000 கோடி ரூபாய் பலன்களை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில், புதிய ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சில பிரிவுகளின் புதிய ஊதிய விகிதத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாக உணரப்பட்டது. ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இரண்டு விருப்பங்களுடன் கூடுதலாக மூன்றாவது விருப்பம் வழங்கப்படும்.' என்றார். 2.25 மற்றும் 2.59 இன் மடங்குகளுக்கு கூடுதலாக ஊழியர்களுக்கு மூன்றாவது விருப்பத்தை முதல்வர் அறிவித்துள்ளார். மூன்றாவது விருப்பம் 15% நேரடி உயர்வாகும்.

அகவிலைப்படியில் 3 சதவீதம் உயர்வு

பஞ்சாப் அரசின் புதிய ஊதிய விகிதங்களின்படி மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஜெய்ராம் தாக்கூர் அறிவித்தார். இதன் மூலம், 1.75 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் நிதி பலன்கள் வழங்கப்படும். அதாவது, இனி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளின் வழியில், ஊழியர்களுக்கும் 31 சதவீத டிஏ வழங்கப்படும். இதற்காக, அரசு கருவூலத்தில் இருந்து, 500 கோடி ரூபாய் செலவிடப்படும்.

மேலும் படிக்க | சூப்பர் செய்தி: இந்த ஊழியர்களின் அகவிலைப்படியில் 14% அதிகரிப்பு!!

ஆண்டு வருமான வரம்பும் அதிகரித்துள்ளது

அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன், பல்வேறு நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான வரம்பு ரூ.35000-லிருந்து ரூ.50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், '2015ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்படும் போலீஸ் கான்ஸ்டபிள்கள், மற்ற வகை ஊழியர்களுக்கு இணையான அதிக ஊதியம் பெற தகுதியுடையவர்கள். உயர் ஊதிய விகிதத்திற்கு தகுதியான அனைத்து காவலர்களுக்கும் அதன் பலன் உடனடியாக கிடைக்கும். 2015ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் 2020ஆம் ஆண்டு முதல் அதிக ஊதியம் பெறத் தகுதி பெறுவார்கள். அதே சமயம், ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துவதற்கான காலம் இரண்டு ஆண்டுகளாகும். பணியமர்த்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும். கான்ஸ்டபிள்களுக்கும் இதே விதி பொருந்தும்.' என்று கூறினார்.

மத்திய அரசும் அகவிலைப்படியை அதிகரிக்கக்கூடும்

மறுபுறம், மத்திய அரசும் மத்திய ஊழியர்களின் அகவிலைபப்டியை மீண்டும் ஒருமுறை உயர்த்தக்கூடும். ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளைப் பார்த்தால், செப்டம்பர் 2021 வரை, அகவிலைப்படி 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இதன்படி அதில் 2 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்களுக்குப் பிறகு இதில் மீண்டும் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மொத்த அகவிலைப்படி 3% அதிகரித்து 34% ஆக உயரும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும், இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission முக்கிய செய்தி: அகவிலைப்படி 34% ஆவது உறுதியானது, அறிவிப்பு எப்போது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News