ஆண்களின் பாலியல் செயல்பாடுகளுக்கு வேட்டு வைத்த NoNutNovember!

ஆண்களை பாலியல் செயல்பாடுகள் இன்றி முப்பது நாட்கள் சகித்துக்கொள்ள ஊக்குவிக்கும் NoNutNovember ஹாஸ்டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Last Updated : Nov 3, 2019, 04:49 PM IST
ஆண்களின் பாலியல் செயல்பாடுகளுக்கு வேட்டு வைத்த NoNutNovember! title=

ஆண்களை பாலியல் செயல்பாடுகள் இன்றி முப்பது நாட்கள் சகித்துக்கொள்ள ஊக்குவிக்கும் NoNutNovember ஹாஸ்டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பல சமூக ஊடக பயனர்கள் சவாலால் ஏற்படும் கஷ்டத்தைப் பற்றி கேலி செய்தாலும், சிலர் நடப்பு மாதத்திற்கு வெவ்வேறு வகையான “விலக்கு” பரிந்துரைத்தனர். நவம்பர் மாதத்தின் தொடக்கமானது ஆன்லைன் கூட்டத்தினரிடையே ஒரு விசித்திரமான வளர்ச்சியால் குறிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இணையவாசிகள் பலர் இந்த பிரம்மாண்ட சவாலில் பங்கேற்கத் தயாராக இருந்துவருகின்றனர்.

வழக்கமாக NoShaveNovember எனும் ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகும் நிலையில், இந்தாண்டு இதற்கு மாற்றார் NoNutNovember எனும் ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது. NoShaveNovember எனும் ஹாஸ்டேக் சவாலை ஏற்கும் இணையவாசிகள், நவம்பர் மாதம் முழுவதும் தங்கள் தாடியை எடுக்காமல், தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிருவதுண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு இதற்கு மாற்றாய் NoNutNovember எனும் டேக் பிரபலமாகியுள்ளது.

NoNutNovember  என்று அழைக்கப்படும், இந்த சவால் ஆண்களை பாலியல் செயல்பாடுகள் இன்றி முப்பது நாட்கள் சகித்துக்கொள்ள ஊக்குவிக்கிறது.

இந்த சவாலை மேற்கொள்ள விரும்புவோர் நீண்டகால மன உறுதி மற்றும் சகிப்புத்தன்மையின் சோதனைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டதால், பல சமூக ஊடக பயனர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களது மீம்ஸ்களை பிரபலமடைய செய்துள்ளனர். அதன் சிறு தொகுப்பி கீழே உங்கள் பார்வைக்கு...

Trending News