ஒரு பொருள் அல்லது நிறுவனத்தின் புகழ் அல்லது பயன் உச்சத்தில் இருக்கும்போதெல்லாம், பல ஏமாற்று வேலைகளும் பல மோசடிகளும் அதன் பெயரில் தொடங்குகின்றன. ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியமான ஆவணம் மற்றும் அடையாள அட்டையாகும். ஆகையால் சமீப காலங்களில் ஆதார் அட்டையின் பெயரில் பல மோசடிகள் நடந்து வருகின்றன. ஆதாரின் பெயரில் ஒரு புதிய மோசடி தொடங்கியுள்ளது. இதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்படுகிறது என்பது அனைவருக்கு தெரியும். பல மாநிலங்களில் ஆதார் அட்டைகளுக்காக கியோஸ்க் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை மாநில அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆதார் மையத்தின் முழுமையான தகவல்கள் UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஆதார் அட்டையின் (Aadhaar Card) சில சட்டவிரோத மையங்களும் கடந்த சில மாதங்களாக செயலில் உள்ளன. அவை மக்களுக்கு ஆதார் தொடர்பான சேவைகளை வழங்குகின்றன. இந்த வலைத்தளங்கள் மக்களிடமிருந்து பணத்தையும் பெற்று வருகின்றன. இவற்றின் ஸ்க்ரீண் ஷாட்டை கீழே காணலாம்.
ஆதார் ஃப்ரான்சைசின் பெயரில் மோசடி செய்யப்படலாம்
சட்டவிரோதமாக ஆதார் ஃப்ரான்சைஸ்களை மக்களுக்கு வழங்கும் சில வலைத்தளங்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன. அதிகாரப்பூர்வமான ஆதார் மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் (CSC) செய்யப்படுவது போலவே, இந்த வலைத்தளங்களிலும் லாக் இன் செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. CSC, வாடிக்கையாளர் சேவை மையம் என்றும் அழைக்கப்படுகிறது. சொல்லபோனால், இந்த போலி வலைத்தளங்களும் பொது சேவை மையங்களாகவே செயல்படுகின்றன. ஆனால் இவை முற்றிலும் சட்டவிரோதமானவை.
ஏனெனில் UIDAI-ன் இணையதளத்தில் இந்த வலைத்தளங்களின் பெயர்கள் இல்லை. ஆகவே, ஆதார், வாக்காளர் அட்டை (Voter ID)மற்றும் பான் கார்டை அச்சிட அல்லது பதிவிறக்க அதிகாரப்பூர்வ பொது சேவை மையம் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை பயன்படுத்துவது நல்லது.
ALSO READ: Budget 2021: Mobile Phone வாங்கப்போறீங்களா? விலை ஏறுமா இறங்குமா?
இந்த வலைத்தளங்களில் சில, ஆதார் அச்சிடுவதற்கான வசதியை வழங்குகின்றன. பல வலைத்தளங்கள் பான் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை அச்சிடும் வசதியை வழங்குகின்றன. இந்த வலைத்தளங்கள் செயல்படும் விதம் எவ்வாறென்றால், முதலில் நீங்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்து ஒரு ஐடியை உருவாக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அதன் பிறகு நீங்கள் லாக் இன் செய்து, ஆதார் கார்ட், பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றை அச்சிட்டுக் கொள்ளலாம்.
ஒரு உதாரணம் மூலம் விளக்க வேண்டுமானால், ஆதார் வலைத்தளத்தில், ஆதார் அட்டையை பிரிண்ட் செய்ய, நீங்கள் இரண்டு அல்லது மூன்று செயல்முறைகளை செய்ய வேண்டி இருக்கும். ஆனால், இந்த வலைத்தளங்கள் மூலம் ஒரே கிளிக்கில் ஆதாரை பிரிண்ட் செய்து விடலாம். இந்த வலைத்தளங்களில் ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் பான் கார்டின் சில சேவைகளுக்கான நேரடி இணைப்புகள் மீண்டும் ரீ-டெரெக்ட் செய்யப்ப்பட்டுள்ளன.
ALSO READ: Budget 2021: Good news, Rs.6000 ஆக இருந்த PM Kisan நிதி Rs.10,000 ஆக உயரக்கூடும்
இந்த வலைத்தளங்களின் பெயர்கள் பின்வருமாறு:
https://www.aadhaarsmartcard.com/
http://www.smartrobo.online/login.php
http://newprint.smartrobo.in/login.php
https://www.aadhaarsmartcard.com/
http://indianprintportal.xyz/reg.php
https://www.printonline.xyz/reg.php
https://www.aadhaarsmartcard.com/
https://printportal.online/newlogin.php
https://printportal.alami.in/CreateAccountMycyberSolutions.php
http://www.kritiprintpotal.xyz/
https://theprintportal.online/login
https://shahanurprintportal.xyz/
https://www.aadhargkprint.xyz/
http://digitaladhaarprint.com/
https://www.aadhaarsmartcard.com
https://www.bestprintportal.com/reg.php
https://www.advanceprint.xyz/reg.php
https://www.uidprint.xyz/login.php
https://digitaladharprint.online/
https://smartrobo.in/new-login.php
https://www.digitalfastprint.in/
https://utipancardservices.xyz/
மக்கள் இந்த வலைத்தளங்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டும் தங்கள் பணிகளை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR