மக்களே...சாணம், கோமித்தால் ஆன சோப்பு & சாம்பு Amazon-ல் விரைவில்!

பசுஞ்சாணம், கோமியம் ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட சோப்புகள் மற்றும் சாம்புகளை ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மையம் ஒன்று அமேசானில் விற்பனை செய்யவுள்ளது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2018, 01:47 PM IST
மக்களே...சாணம், கோமித்தால் ஆன சோப்பு & சாம்பு Amazon-ல் விரைவில்!  title=

பசுஞ்சாணம், கோமியம் ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட சோப்புகள் மற்றும் சாம்புகளை ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மையம் ஒன்று அமேசானில் விற்பனை செய்யவுள்ளது...! 

மனிதர்கள் தங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்கின்றனர். மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு மற்றும் சாம்பு-க்கள் பல வகைகளின் பல நிறுவங்கள் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்களுக்கு தேவையாத சில பொருட்களை தேர்வு செய்து உபயோகித்து வருகின்றனர். 

தற்போதைய மக்களிடம் அதிகம் காணப்படுவது ஆன்லைன் ஷாப்பிங். தங்களின் பரபரப்பான சூழ்நிலையில் சிலரால் கடைக்கு சென்று பொருட்கள வாங்குவது என்பது கடினம் அதனாலதான் பல நிறுவனகள் ஆன்லைன் முறையை அறிமுகபடுத்தியுள்ளது.  

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுரா நகரின் பரா பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் நடத்தப்படும் தீன்தயாள் தம் என்ற மையம் உள்ளது. பசுஞ்சாணம், கோமியம் ஆகியவற்றால் தயார் செய்யப்படும் சோப்பு, ஷாம்பு, முகப்பூச்சு மற்றும் மருத்துவ பொருட்களை இந்த மையம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இப்பொருட்கள் அனைத்தையும் விரைவில் அமேசான் நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்ய தீன்தயாள் தம் மையம் முடிவு செய்துள்ளது. பதாஞ்சலி-யை போல் இதுவும் மக்களிடம் பெரும் பங்கு வகிக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது..! 

 

Trending News