ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது

ஏப்ரல் மாதம் சிலருக்கு வரங்களையும் சிலருக்கு பிரச்சனைகளையும் தர்ப்போகிறது. ஏப்ரல் 2022 எந்த ராசிக்காரர்களுக்கு உகந்தது, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அசுபமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2022, 08:54 AM IST
  • உங்கள் மாத ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்
  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் அல்லது பிரச்சனைகள் ஏற்படும்
  • 4 ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்
ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது title=

2022 ஏப்ரல் மாதம் 4 ராசிக்காரர்களுக்கு பல வரங்களைத் தரப்போகிறது. பணம் சம்பாதிப்பது மற்றும் முன்னேற்றம் தவிர, குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை ஜோதிட குரு பெஜன் தருவாலாவின் மகன் சிராக் தருவாலாவிடம் இருந்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்: ஏப்ரல் மாதம் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிடப்படும். மதத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இல்லற மகிழ்ச்சி நிலைகள் நன்றாக இருக்கும். அதிக மன அழுத்தத்தை உணருவீர்கள். குடும்பத்தைப் பற்றிய கவலை இருக்கலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

ரிஷபம்: இந்த மாதம் குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். அரசுப் பணிகள் தடையின்றி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் ஒத்துழைப்பு எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும், வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளால் ஆத்ம திருப்தி கிடைக்கும். காதல் வழியில் சில தடைகள் ஏற்படலாம். திருமணமானவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: இந்த மாதம் நீங்கள் உங்கள் வேலையில் மிகுந்த சாதுர்யத்துடன் வெற்றி பெறுவீர்கள். கோபம் அதிகமாக வரும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை மோசமடையும். தொழிலில் லாபம் கிடைக்கும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக யோசித்து எடுக்க வேண்டும். நிதி ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்காது. 

கடகம்: இந்த மாதம் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் வெற்றியையும் கௌரவத்தையும் அடைவீர்கள். இந்த மாதம் பண லாபம் நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்கள் துணையுடன் சிறந்த நேரத்தை செலவிடலாம். குடும்பத்தில் சில நிகழ்ச்சிகள் அல்லது மங்களகரமான வேலைகள் ஏற்பாடு செய்யப்படும், இதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சிம்மம்: இந்த மாதம் உங்கள் வீட்டில் சில சுப காரியங்கள் நடைப்பெறும். உங்கள் வாழ்க்கைத் துணையால் சமூகத்தில் கௌரவம் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் அனைவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆனால் தாய் மற்றும் மனைவியின் ஆரோக்கியம் உங்களை கவலை அடைய செய்யூம். 

கன்னி: உங்கள் வேலையில் லாபமும் வெற்றியும் கிடைக்கும்.தொண்டு பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். வீட்டில் சுமுகமான சூழல் இருக்கும் அதே சமயம் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

துலாம்: இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மனதில் குழப்பம் குறையும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள் மற்றும் சமூகத்தில் உங்கள் மரியாதையை அதிகரிக்கும். 

விருச்சிகம்: இந்த மாதம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகள் புதிய கூட்டாண்மைகளில் ஈடுபடலாம். குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும். பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயர் பதவியில் இருக்கும் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள்.

தனுசு: இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் நல்ல ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் காணப்படும். வேலைத் துறையில் வெற்றியும் புகழும் பெறுவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் குடும்ப விஷயங்களில் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்: இந்த மாதம் அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். மதப் பயணங்கள் அல்லது பொழுதுபோக்கு பயணங்கள் இருக்கலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மற்றவர்களுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும், இது உங்களுக்கு நன்மை பயக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த மாதம் திருமண வாய்ப்பு கிடைக்கும். 

கும்பம்: இந்த மாதம் புகழ் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களுடன் நல்லுறவு உருவாகும். நீங்கள் மதப் பணிகளில் பங்களிப்பீர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவீர்கள். 

மீனம்: உங்களின் மதிப்பும் சமூக மதிப்பும் உயரும். இந்த மாதம் பயணம் மற்றும் பொழுதுபோக்குக்கு சிறப்பாக இருக்கும். வெற்றி உண்டாகும். சட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகளைக் காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News