Bank Holidays: வங்கி விடுமுறையா, தமிழகத்தில் என்ன நிலவரம்!

இன்றும் நாளையும் வங்கிகளுக்குக்கு விடுமுறை தினமாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2021, 03:45 PM IST
Bank Holidays: வங்கி விடுமுறையா, தமிழகத்தில் என்ன நிலவரம்! title=

கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகமும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளனர். தினசரி தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டுகிறது. 

நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், வங்கிகளிலும் (Banks) பல விதமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிகப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாடிக்கையாளார்களுக்கான வங்கி நேரத்தினை குறைக்க, நண்பகல் 12 மணி வரை செயல்படவும், வங்கி கிளையை மதியம் 1 மணிக்கே மூடவும் உத்தரவிட வேண்டும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசுக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பொது செயலாளர் எழுதிய கடிதத்தில், கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் அடுத்து வரும் 24 ஆம் தேதி வரையில் ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டது. மேலும் வங்கிகளில் தற்போது 50% பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

ALSO READ | அதிக பணம் எடுக்க SBI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதி அறிவிப்பு!

இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் பலவித கட்டுப்பாடுகள் நிலவி வருவதால், ஏற்கனவே வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை. இந்நிலையில் இன்றும் நாளையும் வங்கிகளுக்குக்கு விடுமுறை (Bank Holidays) தினமாக உள்ளது. இன்று ரம்ஜான்  விடுமுறை தினமாக உள்ளது. எனினும் இந்த நாளில் தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படவில்லை. மற்ற சில மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி/ ரம்ஜான் EId/ பசவ ஜெயந்தி/ அட்சய திருதி முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே மீண்டும் வங்கிகள் செயல்படும். அதன் பிறகு 16, மே 2021 ஞாயிற்றுகிழமை விடுமுறை. 

22, மே 2021, நான்காவது சனிக்கிழமை 23, மே 2021 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 30, மே 2021 ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டு செயல்படுங்கள் ஏற்கனவே கொரோனாவின் காரணமாக வங்கிகளில் பல கட்டுப்பாடுகள் நிலவி வருவதால், மக்கள் முன் கூட்டியே வங்கி வேலைகளை திட்டமிடலாம். 

இங்கே காண்க, வங்கி விடுமுறைகளின் (Bank Holidays) பட்டியல்-
<< 13 மே: ரமலான் ஈத் (ஈத்-உல்-பித்ர்). இந்த நாளில் பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் விடுமுறை. 
<< மே 14: ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி / ரமலான் ஈத் (ஈத்-உல்-பித்ர்) / அக்ஷய திரிதியை பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர் இல் வங்கிகள் விடுமுறை.
<< மே 16: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)
<< மே 22: நான்காவது சனிக்கிழமை (அனைத்து இடங்களிலும்)
<< 23 மே: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)
<< 26 மே: புத்த பூர்ணிமா. அகர்தலா, பெலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இந்த நாளில் வங்கிகள் மூடப்படும்.
<< மே 30: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News