ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: மாறுகிறதா கிராஜுவிட்டி செயல்முறை?

Gratuity: ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15 நாட்களுக்குப் பதிலாக 30 நாட்கள் பணிக்கொடை வழங்குவது குறித்து இன்று மாநிலங்களவையில் பேசப்பட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2022, 05:40 PM IST
  • பணியாளர்களுக்கு முக்கியமான செய்தி.
  • பணிக்கொடைத் தொகையை மாற்ற மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
  • சபையில் இணை அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: மாறுகிறதா கிராஜுவிட்டி செயல்முறை? title=

புதுடெல்லி: மாத சம்பளம் பெறும் வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. கிராஜுவிட்டியின் செயல்முறையில் எந்த மாற்றங்களையும் செய்ய மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாள் சம்பளத்திற்கு இணையான கிராஜுவிட்டி வழங்கப்படும் என்றும், அதை 30 நாட்களாக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஷ்வர் டெலி தெரிவித்துள்ளார்.

இணை அமைச்சர் பதிலளித்தார்

மாநிலங்களவையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர், ராமேஷ்வர் டெலியிடம், ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றிய, தனியார் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டித் திட்டம் செயல்படுத்தப்படுமா என, கேள்வி கேட்கப்பட்டது. 

இதற்கு பதிலளித்து பேசிய இணை அமைச்சர், 2020 சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் பணியிலிருந்து நீக்கப்பட்டாலோ, இறப்பு, இயலாமை,  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணிநீக்கம் அல்லது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஏதேனும் காரணமாக பணியாளரின் பணி நிறுத்தப்படாலோ, அந்த சந்தர்பங்களில் கிராஜுவிட்டிக்கு 5 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை இருக்க வேண்டும் என்ற அவசியம் தேவை இருக்காது என்று கூறினார்.

மேலும் படிக்க | ரயில் பயணத்தில் திருடு போன சாமான்களுக்கு இழப்பீடு கோரலாம்..!!

பணிக்கொடை என்றால் என்ன

பணிக்கொடை என்பது 1972 ஆம் ஆண்டு பணிக்கொடைச் சட்டம் 1972-ன் கீழ் பணியாளர்கள் பெறும் ஒரு நன்மையாகும். நிறுவனம் அல்லது முதலாளி தனது பணியாளரின் பல வருட சேவைகளுக்கு ஈடாக வழங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியாகும் இது. வேலையை விட்டு வெளியேறும்போது அல்லது பணி முடித்தவுடன் பணியாளருக்கு நிறுவனத்தால் பணிக்கொடை வழங்கப்படுகிறது. 

பணிக்கொடை பணி ஆண்டு x கடைசி சம்பளம் x 15/26 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

உதாரணமாக, ஒரு ஊழியர் 30 ஆண்டுகள் பணிபுரிந்து, அவருடைய கடைசி சம்பளம் ரூ. 30,000 எனில், அவர் 30x30000x15/26 = ரூ. 519,230.7692 கிராஜுவிட்டியைப் பெறுவார்.

மேலும் படிக்க | கொரோனா காலத்தில் அதிரடி வளர்ச்சி! லாபத்தில் திளைக்கும் காப்பீட்டு நிறுவனங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News