ரேஷன் கார்டுதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் திட்டம் உள்ளிட்ட கூடுதல் தானியங்களின் பலன் அவர்களுக்கு கிடைக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 27, 2023, 04:39 PM IST
  • ஆயுஷ்மான் கார்டுகள் அக்டோபர் 2ம் தேதிக்குள் தயாரிக்கப்படும்.
  • ரேஷன் ஆதார் கேஒய்சியை முடிக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • பிபிஎல் குடும்பங்களுக்கு ரூ.29 குறைந்த விலையில் தானியம்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்: நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்து, அரசின் இலவச ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அரசு சார்பில் சில சிறப்பு ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பல வசதிகள் வழங்கப்படும்.

இமாச்சலப் பிரதேசத்தின் ரேஷன் டிப்போக்களில் நவம்பர் முதல் கருப்பு கொண்டைக்கடலை வழங்கப்படும். இதனிடையே மூன்று மாதங்களுக்கான கருப்பு கொண்டைக்கடலைக்கான ஆர்டர்களை மாநில உணவுப் பொருள் வழங்கல் கழகம் பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், NFSA (National Food Security Act), BPL மற்றும் அந்தியோதயா நுகர்வோருக்கு 2280 MT சரக்குகளும், APL குடும்பங்களுக்கு 3000 MT க்கும் அதிகமான சரக்குகளும், வரி செலுத்துவோருக்கு 2009 MT சரக்குகளும் ஒதுக்கப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நவம்பர் முதல் 3 மாதங்களுக்கு இமாச்சல பிரதேச ரேஷன் கார்டுதாரர்களுக்கு கருப்பு கொண்டைக்கடலை வழங்கப்படும்.

மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டு தொடர்பான புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

நவம்பர் முதல் கருப்பு கொண்டைக்கடலை வழங்கப்படும்:
மாநில உணவுப் பொருள் வழங்கல் கழகத்தின் அனைத்துக் கிடங்குகளுக்கும் அடுத்த மாதத்துடன் இதன் விநியோகம் நிறைவடையும். இமாச்சலில் 19.5 லட்சம் ரேஷன் கார்டு பயனர்கள் உள்ளனர், இதில் 7.5 லட்சம் பேர் ஏபிஎல் ரேஷன் கார்டு பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி, 12 லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோர் பிபிஎல், என்எப்எஸ்ஏ மற்றும் அந்த்யோதயா பிரிவுகளில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், ஏபிஎல் குடும்பங்களுக்கு (APL Ration Card)சந்தை விலையை விட ரூ.15 குறைவாக கருப்பு கொண்டைக்கடலை வழங்கப்படும், அதே நேரத்தில் பிபிஎல் (BPL Ration Card) குடும்பங்களுக்கு ரூ.29 குறைந்த விலையில் கருப்பு கொண்டைக்கடலை தரப்படும். 

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரேஷனின் ஆதார் கேஒய்சியை செய்து முடிப்பது கட்டாயமாகும்:
இந்நிலையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் ஆதார் (Ration Card KYC) கேஒய்சியை முடிக்க வேண்டியது கட்டாயமாகும், இல்லையெனில் மக்களின் ரேஷன் கார்டு முடக்கப்படும். எனவே ரேஷன் டிப்போவில் e-KYC அதாவது ஆதார் எண்ணை பதிவு செய்ய இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன. அப்படி KYC பணியை இன்னுமும் முடிக்கவில்லை என்றால், இந்த செயல்முறையை கூடிய விரைவில் முடிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்படும், அதனுடன் ரேஷன் பலன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

Ayushman Bhav: திட்டத்தின் பலன்கள்:
ரேஷன் கார்டுதாரர்களும் (Ration Card Holders) ஆயுஷ்மான் பவ (Ayushman Bhav) யோஜனா திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். வீட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ஆயுஷ்மான் கார்டுகள் (Ayushman Card) செய்து தரப்படும். முதற்கட்டமாக ரேஷன் கார்டுதாரர்களின் ஆயுஷ்மான் கார்டுகள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பவ (Ayushman Bhav) திட்டத்தின் கீழ், 1 வருடத்தில் ஒவ்வொரு கார்டு வைத்திருப்பவருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள குடும்பங்களின் ரேஷன் கார்டுதாரர்களும் இதில் சேர்க்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | 1 கோடி அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. அகவிலைப்படி குறித்து சர்ப்ரைஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News