ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: பழைய ஓய்வூதிய திட்டம் வருமா வராதா?

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 10, 2023, 10:11 AM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
  • பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன.
  • சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் இனி புதிய பார்முலாவுடன் அமல்படுத்தப்படும் என்று கூறியது.
ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: பழைய ஓய்வூதிய திட்டம் வருமா வராதா? title=

பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் பல கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இவற்றில் 8ஆவது ஊதியக்குழுவின் அமலாக்கம், 18 மாத டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதிய திட்டதை மீண்டும் கொண்டு வருவது என இவை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றன. பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், பல மாநில அரசு ஊழியர்களும் இதற்காக பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் இனி புதிய பார்முலாவுடன் அமல்படுத்தப்படும் என்று கூறியது. இது ஊழியர்களுக்கு சிறிய நிவாரணத்தை அளித்தது. பல்வேறு மாநில ஊழியர்களிடமிருந்து பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமலில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பழைய ஓய்வூதிய முறை மீண்டும் வரும் என ஊழியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி பீகார் மாநிலம் தர்பங்காவில் கருப்பு தினம் கொண்டாடப்பட்டது. மேலும், செவ்வாயன்று, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அனைத்து ஆசிரியர் பணியாளர்கள் நலச் சங்கம், எம்பி கேசரி தேவி படேலிடம் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பித்தது.பீகாரில் உள்ள தர்பங்காவில், தேசிய ஓய்வூதியத்தின் கீழ் வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பழைய ஓய்வூதியத்திற்கு ஆதரவாக தங்கள் பணியிடங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்கிறார்கள். முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அனைத்து ஆசிரியர் ஊழியர் நலச் சங்கம் (ATEWA) எம்.பி.க்கு ஒரு கடிதம் அனுப்பியது. இப்படி பல மாநிலங்களில் பல முறைகளில் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பல விதமான போராட்டங்காளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாட்டிலும் அதே நிலைதான் உள்ளது. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களில் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். முன்னதாக ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும், இது ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் மீண்டும் வருமா? பரிசீலிக்கும் அரசு... மகிழ்ச்சியான அப்டேட்!!

தேசிய ஓய்வூதியத் திட்டம் vs புதிய ஓய்வூதியத் திட்டம்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)

1. NPSல், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

2. தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.

3. இதன் கீழ், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற NPS நிதியில் 40% முதலீடு செய்ய வேண்டும்.

4. இந்தத் திட்டத்தில் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை.

5. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

1. இதன் கீழ், கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதம், ஓய்வுக்குப் பிறகு மொத்தத் தொகையுடன் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

2. 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான ஏற்பாடும் உள்ளது. ஜி.பி.எஃப்-க்கான ஏற்பாடும் உள்ளது.

3. இதன் கீழ், 20 லட்சம் ரூபாய் வரை கருணைத் தொகை வழங்கப்படுகிறது.

4. இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. பணியாளரின் சம்பளத்தில் இருந்தும் பணம் கழிக்கப்படுவதில்லை.

5. ஓய்வு பெற்ற ஊழியரின் மனைவிக்கு அவர் இறந்தவுடன் ஓய்வூதியம் வழங்கும் வசதி இதில் உள்ளது. இதன் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டிஏவும் வழங்கப்படுகிறது. இதனால், ஓய்வூதியத் தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது.  

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டம் முக்கிய அப்டேட்: விதிகளில் மாற்றம், இந்த ஊழியர்களுக்கு நல்ல செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News