தனது வகுப்புத் தோழனை சைகை மூலம் ஆறுதல் படுத்தும் வீடியோ ஒன்று இணையவாசிகளின் இதயத்தை வெண்டறு வைரலாகி வருகிறது!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், தனது வகுப்புத் தோழனை சைகை மூலம் ஆறுதல் படுத்தும் வீடியோ ஒன்று இணையவாசிகளின் இதயத்தை வெண்டறு வைரலாகி வருகிறது.
ஒரு சிறுவன் தனது வகுப்புத் தோழனை ஆறுதல்படுத்தும் வீடியோ, மக்களை மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்பாக்கியுள்ளது. அந்த வீடியோ, ஒரு சிறுவனின் வெளிப்படையானா எதிர்பார்பற்ற அன்பை வெளிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரளாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களின் இதயத்தையும் நிசயம் வெல்லும்.
இந்த வீடியோவில், ஒரு சிறுவன் துன்பப்பத்தில் அழுகிறான். சில நொடிகளில், அவனது வகுப்பு தோழன் - அவனருகில் அமர்ந்து - அவனை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறான். இறுதியில், அவர் தனது வகுப்பு தோழரை சிறிது நேரம் கட்டிப்பிடிக்கிறார். தனது வகுப்பு தோழர் அழுவதை நிறுத்தும் வரை அவர் இன்னும் சில வினாடிகள் தனது சைகையைத் தொடர்கிறார். இந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவை, அழுகிற சிறுவன் மன இறுக்கம் உடையவள் என்றும் அவனை ஆறுதல்படுத்துவது டவுன் நோய்க்குறி உள்ள குழந்தை என்ற தலைப்பில் பகிரப்படுள்ளது.
இந்த வீடியோவிற்க்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை சுமார் 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது - மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடுதலாக, இது சுமார் 4.7 லட்சத்திற்கும் அதிகமான பங்குகளையும், 1.4 லட்சம் எதிர்வினைகளையும் 10,000 க்கும் மேற்பட்ட கருத்துகளையும் சேகரித்துள்ளது.